மர்ம நோய்க்கு மாடுகள் பலி விவசாயிகள் கலக்கம்

Added : பிப் 15, 2020
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் மர்ம நோயால் மாடுகள் இறப்பதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் பகுதியில் விவசாயிகள் மட்டுமல்லாது, வேறு தொழில் செய்பவர்களும் உபரி வருமானத்துக்காக பசு மாடு வளர்த்து வந்தனர். இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக மாடுகளுக்கு மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.மாட்டின் கழுத்தில் கட்டி போல் வருகிறது. அப்போது முதல் பசு கொடுக்கும் பாலில் அளவு குறைகிறது. சில நாட்களில், தீவனம் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு, மாடுகள் இறந்து விடுகின்றன. கைலாசநாதர் கோவில் பகுதியில் மட்டும் இதுவரை 5 மாடுகள் இறந்துள்ளன.இதனால் பயந்த சிலர் பசு மாடுகளை கிடைத்த விலைக்கு விற்று வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் கூறுகையில், 'மாட்டுக்கு இதுபோன்ற மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டவுடன் பணம் செலவு செய்து சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்து விடுகின்றன. எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. கால்நடைதுறை அதிகாரிகள், மற்ற மாடுகளையாவது, நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X