அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை; ரூ.634 கோடியில் 'சிப்காட்' அமைக்கிறது

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (9)
Advertisement
Tamilnadu, Budget, OPS,NirbayaFund, CCTV, GovtBus, FinanceMinister, தமிழகம், தமிழ்நாடு, பட்ஜெட், நிர்பயா, திட்டம், சிசிடிவி, கண்காணிப்பு, அரசுபேருந்து,

சென்னை : துாத்துக்குடியில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்ய, நாள் ஒன்றுக்கு, 6 கோடி லிட்டர் திறன் கொண்ட, கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை, 634 கோடி ரூபாய் செலவில், 'சிப்காட்' நிறுவனம் அமைக்கும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற அறிவிப்புகள்: ஜனவரியில், 32 ஆயிரத்து, 405 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 52 ஆயிரத்து, 75 கோடி ரூபாய் மதிப்பில், முதலீடுகளுக்கு ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில், மிகப்பெரிய தனிப்பட்ட முதலீடாக, குவைத் நாட்டைச் சேர்ந்த, 'அல் கெப்லா அல் வட்யா' குழுமம், துாத்துக்குடி அருகில், பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப் பொருட்கள் தயாரிப்பு வளாகத்தை, 49 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கிறது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகும்.
ஜி.எஸ்.டி., எனும், பொருட்கள் மற்றும் சேவை வரி நடைமுறைக்கு ஏற்ப, முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்க, புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். தொழில் துறை உபயோகத்தில் உள்ள, தொழில் நிலப் பயன்பாட்டை மேம்படுத்த, தொழில் நிறுவனங்களுக்கான தரைதளக் குறியீடு, ஒன்றிலிருந்து ஒன்றரையாகவும், மனை பரப்பளவு, 50 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை -- பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில், 21 ஆயிரத்து, 966 ஏக்கர் பரப்பளவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொழில் முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை - கன்னியா குமரி தொழில் வழித்தடத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். சென்னை, காட்டுப்பாக்கம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், 300 ஏக்கர் நிலப்பரப்பில், 'பின்டெக் சிட்டி' அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சென்னையில், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான, முன்சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, விமான நிலையத்திற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. 'சிப்காட்' எனும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் வகையில், 4,457 ஏக்கர் நிலத்தை, உடனடி தயார் நிலையில் வைத்துள்ளது. புதுமை முயற்சிகளை தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ், 53.44 கோடி ரூபாய் செலவில், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் ஓசூரில், தொழில் புதுமை முயற்சி மையங்கள் நிறுவப்படும். துாத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்ய, நாள் ஒன்றுக்கு, 6 கோடி லிட்டர் திறன் கொண்ட, கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை, 634 கோடி ரூபாய் செலவில், 'சிப்காட்' நிறுவனம் அமைக்க உள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் 'எச்.எல்.எல்., லைப் கேர்' நிறுவனம் இணைந்து, 205 கோடி ரூபாய் முதலீட்டில், செங்கல்பட்டு அருகே, மருத்துவப் பூங்கா நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் துறைக்கான ஊக்கத் தொகை வழங்க, 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழிற்பேட்டைகள் படித்த வேலையில்லா இளைஞர் வேலைவாய்ப்பு திட்ட பயன்களை விரிவுபடுத்தும் வகையில், திட்ட முதலீட்டிற்கான வரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இத்திட்டத்தில், தகுதி வாய்ந்த மானியத்தின் வரம்பு, 1.25 லட்சம் ரூபாயிலிருந்து, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, 33 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் மூலதன மானியத்திற்காக, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் கடன் உத்தரவாத நிதிக் குழு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மானியம், 3ல் இருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்படும்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், உமையாள்புரம், புத்திரகவுண்டன்பாளையம் கிராமங்களில், 4.50 கோடி ரூபாய் செலவில், புதிய தொழிற்பேட்டைகள் நிறுவப்படும். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், 500 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதற்காக, 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்காக, 607.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கீழடியில் அகழ் வைப்பகம்


தமிழர் நாகரிகத்தின் தொன்மையை மக்களுக்கு அறிவிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், உலகத் தரமான அகழ்வைப்பகம் அமைக்க, 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன், தமிழக தொல்லியல் துறை, நான்கு தொகுப்புகளில் கள ஆய்வு செய்ய, 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


கைத்தறி்க்கு ரூ.1,224 கோடி


கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு, 1,224.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி விற்பனையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்படும், தள்ளுபடி மானியத் திட்டத்திற்காக, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கைத்தறி உதவித் திட்டத்திற்கு, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு, மானியமாக வழங்க, 360.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய ஜவுளிக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட, கூடுதல் ஊக்கத் தொகை வழங்க, 48.02 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு, மொத்தம் 1,224.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு ரூ.1,050 கோடி


தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு, அரசின் பொதுப் போக்குவரத்து வசதிகள் தான் உதவுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள், 19 ஆயிரத்து, 496 பஸ்களை, தினமும் இயக்குகின்றன. அவற்றின் ஆயுள்காலம், சராசரியாக, 6.58 ஆண்டுகள். அவற்றின் எரிபொருள் இயக்க திறன், லிட்டர் டீசலுக்கு, 5.34 கி.மீ., ஆக உள்ளது. அவற்றால் ஏற்படும் விபத்து விகிதம், 1 லட்சம் கி.மீ.,க்கு, 0.12 என்ற அளவில் குறைந்துள்ளது.

குறைந்த கட்டணத்தில், அதிகமானோரை பொதுப்போக்குவரத்து இணைக்கிறது. பி.எஸ்., - 6 என்ற, 'பாரத் ஸ்டேஜ் - 6' தரத்திலான, 2,213 புதிய பஸ்களை வாங்க, 1,580 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, முதல்கட்ட நிதி பெற, ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடம், 2019 செப்., 26ல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த, 960 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'பேம் இந்தியா - 2' என்ற திட்டத்தில், 525 மின்சார பஸ்களை வாங்குவதற்கான, 'டெண்டர்' விரைவில் இறுதி செய்யப்படும்.

டீசல் விலை ஏற்றத்தால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, 298 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இலவச பஸ் பாஸ் திட்டத்துக்காக, 1,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 மார்ச் வரை ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வு கால பலன்களுக்காக, குறுகிய காலக் கடனாக, 1,093 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, நிர்பயா நிதியத்தின் படி, 75.02 கோடி ரூபாய் செலவில், அனைத்து பஸ்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

பணமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த, மின்னணு பயணச்சீட்டு முறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து துறைக்காக, 2,716.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


பயிர் கடன் இலக்கு ரூ.11 ஆயிரம் கோடி'வரும் நிதியாண்டில், கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, பயிர் கடனாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. l கூட்டுறவு நிறுவனங்கள், தமிழகத்தின் ஊரக பொருளாதாரத்திற்கு திறம்பட உதவி வருகின்றன. நடப்பு, 2019 - 20ம் நிதியாண்டில், பயிர் கடன்கள் வழங்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இதுவரை, 10.60 லட்சம் விவசாயிகளுக்கு, 7,595 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. வரும் நிதியாண்டில், பயிர் கடனாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு, முழு வட்டியை தள்ளுபடி செய்ய, பட்ஜெட்டில், 200 கோடி ரூபாய் ஒதுக்கப்ப பட்டுள்ளது.


வேளாண் துறைக்கு முக்கியத்துவம்''டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, முதல்வர் அறிவித்துள்ளது, வேளாண் துறைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை குறிக்கிறது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். அவரது பட்ஜெட் உரை: தமிழகத்தின் மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர், கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்; அவர்களுக்கு விவசாயம் தான், முதன்மையான வாழ்வாதாரம்.

விவசாயியை மையமாக கொண்ட அணுகுமுறையை பின்பற்றுவதே, கிராமப்புற மக்களின் இல்லாமையை போக்குவதற்கும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும். வேளாண் துறையில் முதலீடு செய்வது என்பது, உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இன்றியமையாதது. காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, முதல்வர் அறிவித்துள்ளது, வேளாண்மை துறைக்கு, அரசு அளித்து வரும் பெரும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,991 கோடிநீர் பாசன திட்டங்களுக்கு மட்டும், 6,991 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. குடிமராமத்து திட்டத்திற்கு நடப்பாண்டில், 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம குளங்கள், ஊருணிகள் ஆழப்படுத்துதல், நகர்ப்புற கோவில் குளங்கள் புனரமைப்பு போன்ற பணிகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும்.

காவிரி வடிநில பகுதிகளில் உள்ள கால்வாய்களை துார்வாரும் பணியை, அடுத்த பருவமழை காலத்திற்கு முன் செய்வதற்கு, 67.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, வெள்ள உபரி நீரை, சேலம் மாவட்டத்தில், வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான, சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு, 11 ஆயிரத்து, 250 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை, மத்திய நீர்வள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி நீர் பாசன திட்டத்திற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய குளங்கள் உருவாக்குதல், அணைக்கட்டுகள் கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால் அமைக்க, 655 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் பாசனத்திற்கு மட்டும், 6,991 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


7,234 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு


கடந்த, 2011ம் ஆண்டு முதல், 1,125 கோவில்களுக்கு சொந்தமான, 7,234 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த, 2011 முதல் தற்போது வரை, 11 ஆயிரத்து, 365 கோவில்களுக்கு, 542.73 கோடி ரூபாய் செலவில், திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஒரு கால பூஜை திட்டத்தில், 12 ஆயிரத்து, 745 கோவில்கள் பலன் பெற்றுள்ளன. 2011 முதல் இதுவரை, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள, 6,741 கோவில்களின் திருப்பணிகள், 49.21 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளன

858 கோவில் குளங்கள், 4.69 கோடி ரூபாய் செலவில் துார் வாரப்பட்டுள்ளன. 1,125 கோவில்களுக்கு சொந்தமான, 7,233.76 ஏக்கர் நிலங்கள், 2011 முதல் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அவற்றின் பட்டாக்கள், கோவில் பெயரிலேயே மாற்றப்பட்டுள்ளன. ஹிந்து சமய அறக்ஷநிலையத் துறைக்கு, 281.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நாட்டு இன மாடுகளை பராமரிக்க தனி கவனம்'சேலம், தலைவாசலில் அமைக்கப்படும், கால்நடை அறிவியல் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு இன மாடுகளை பராமரிப்பதற்கு, தனி கவனம் செலுத்தப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள், 'அம்மா' அவசர சிகிச்சை ஊர்தி சேவைகள் வாயிலாக, விவசாயிகளின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே, கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைய உள்ள, கால்நடை அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிலையத்தில், நாட்டு இன மாடுகளை பராமரிப்பது குறித்து, தனி கவனம் செலுத்தப்படும். அந்த நிலையமும், கால்நடை பூங்காவிற்கான இதர வசதிகளும், மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களின் நிதி ஆதாரங்களில் இருந்தும், 'நபார்டு' வங்கியின் நிதி உதவியுடனும், 1,020 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இதற்காக, பட்ஜெட்டில், 199 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. நபார்டு வங்கியின், பால்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ், 304 கோடி ரூபாய் செலவில், நான்கு திட்டங்களை மேற்கொள்ள, மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம்.
ராபர்ட் கால்டுவெல் பெயரில் ஆய்விருக்கை தமிழ் மொழி, பண்பாட்டை உலகறியச் செய்யும் வகையில், ஹார்வர்டு, ஹூஸ்டன், வாரணாசி, கவுகாத்தி உள்ளிட்ட, உள்நாடு, வெளிநாட்டு பல்கலைகளில், தமிழ்மொழி கற்பிக்க முயற்சிக்கப்படுகிறது. உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சிகாகோ; ஐரோப்பிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, பாரிஸ்; தமிழ் இணைய மாநாட்டை, சென்னை, அண்ணாs பல்கலையிலும் நடத்த, 2019 - 20ல் அரசு நிதி அளித்தது.
தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ் பல்கலையில், ஒப்பிலக்கண ஆய்விருக்கை நிறுவப்பட உள்ளது. தமிழ் வளர்ச்சித் துறைக்காக, 2020 -- 21ம் ஆண்டு பட்ஜெட்டில், 74.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு ஆயுள் காப்பீடு திட்டம் 'வறுமை கோட்டிற்கு கீழுள்ள, அனைத்து குடும்பங்களும் பயனடையும் வகையில், 'புரட்சித் தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்' விரைவில் அறிமுகம் செய்யப்படும்' என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: புதிதாக உருவாக்கப்பட்ட, ஐந்து மாவட்டங்களில், 550 கோடி ரூபாய் மதிப்பில், பெருந்திட்ட வளாகங்கள் அமைக்கும் இடங்களை கண்டறிவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு, 4,315 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 'ஐந்து லட்சம் கூடுதல் பயனாளிகளுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படும்' என, 2019 நவம்பரில், முதல்வர் அறிவித்தார். இதுவரை, 1.73 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை, வரன்முறை செய்வதற்கான சிறப்பு திட்டத்தை, 2019 ஆகஸ்டில், அரசு சீரமைத்துள்ளது. அதன்படி, தகுதிவாய்ந்த நபர்களுக்கு, இலவச வீட்டு வசதி வழங்கப்படும். இதுவரை, ஆட்சேபனையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த, 1.28 லட்சம் குடும்பங்களில், 35 ஆயிரத்து, 470 பேருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு, ஆகஸ்ட் மாதத்திற்குள், வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, வறுமை கோட்டிற்கு கீழுள்ள, அனைத்து குடும்பங்களும் பயனடையும் வகையில், 'புரட்சி தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்' விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன; 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
15-பிப்-202021:52:30 IST Report Abuse
dandy விரைவில் ஆசியாவின் DEAD SEA இங்குதான் ...இப்பொது ஆசியாவின் புற்று நோய் நகரம் அழகிய தமிழ் பேசும் இந்த மக்கள் பாராட்டுக்கு உரியவர்கள்
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
17-பிப்-202015:39:04 IST Report Abuse
suresh kumar//விரைவில் ஆசியாவின் DEAD SEA இங்குதான் ..// அரேபிய வளைகுடா இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நன்றாகத்தானே இருக்கிறது?...
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
15-பிப்-202017:48:40 IST Report Abuse
Girija சைனாவில் இருந்து காப்பர் இனிவராது , காப்பருக்கு இனி சிங்கிதான் அடிக்கணும். ஸ்டெர்லைட் டினால் ஏற்பட்ட வேலை இழப்பின் பாதிப்பை வெளியிட ஒரு தொல்லைக்காட்சிக்கும் தைரியமில்லை. வேலை இல்லாதால் மக்கள் தொகைதான் பெருகும் . காப்பர் டி க்கு தேவை அதிகரிக்கும்.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
15-பிப்-202021:54:13 IST Report Abuse
dandyகாப்பர் ???? சங்க காலத்து தமிழ் ....டாஸ்மாக் டொமிழன் எதுவும் இல்லாமல் வாழ்வான் ..ஆனால் சாராயம் மட்டும் வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-202016:00:10 IST Report Abuse
ஆரூர் ரங் ஸ்டெர்லைட் போராளிகளுக்கு தண்ணியே கொடுக்காதீங்க இந்த தண்ணி உற்பத்தியால் மாசு உண்டாகும்ன்னு கொளுத்திப்போடுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X