விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 15, 2020
Share

விருத்தாசலம்:விருத்தாசலம் இன்பேன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் காமிலா பானு, ஏட்டு சிவசக்தி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

மாணவிகளுக்கு வழியில் ஏற்படும் பிரச்னைகள், அவற்றை தவிர்க்கும் வழிமுறைகள், காவலன் செயலியின் பயன்பாடு, பாதுகாப்பு அம்சங்கள், கல்வியில் அதிகம் கவனம் செலுத்தும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X