பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் ரயில்வேயில் 'ரோல் ஆன் ரோல்' ஆப் சேவை

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (3)
Advertisement
விரைவில் ரயில்வேயில் 'ரோல் ஆன் ரோல்' ஆப் சேவை

மதுரை: கொங்கன் ரயில்வேயில் வெற்றிகரமாக செயல்படும், சரக்கு லாரிகளை ரயிலில் ஏற்றி சென்று இறக்கும் 'ரோல் ஆன் ரோல் ஆப்' (ரோரோ) சேவையை தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மதுரை கோட்டத்தில் துவக்க பரிசீலனை நடக்கிறது. விரைவில் மதுரை, சென்னை இடையே இந்த சேவை துவங்கும்.

வடமாநிலங்களிலிருந்து பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில்களில் தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. தென் மாவட்டங்களிலிருந்து சிமென்ட், அரிசி, ஜவுளிகள் வடமாநிலங்களுக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

மாநிலத்திற்குள் பெரும்பாலும் சரக்கு லாரிகள் மூலம் இவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், லாரிகளில் ரோடு வழியாக கொண்டு செல்வதால் தாமதம், விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதை தவிர்க்க சரக்குகளை லாரிகளில் ஏற்றி, ரயில்களில் மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று இறக்கும் 'ரோல் ஆன் ரோல் ஆப்' சேவை கொங்கன் ரயில்வேயில் சோதனை ரீதியாக துவக்கப்பட்டது. ஆனால் இச்சேவை இப்போது வெற்றி பெற்றதுடன் தொழில், வர்த்தகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.குறையும் பயண நேரம்தற்போது மும்பையிலிருந்து 145 கி.மீ., துாரத்திலுள்ள கோலட், 417 கி.மீ., துாரத்திலுள்ள வெர்னா, கோலட் மற்றும் சூரத்கல் இடையே 721 கி.மீ., துாரத்திற்கு இச்சேவை நடக்கிறது. கோலட்- சூரத்கல் இடையே சாலை வழியாக லாரிகள் செல்ல 40 மணி நேரம் ஆகிறது. ஆனால் ரோல் ஆன் ரோல் ஆப் சேவை மூலம் 22 மணி நேரத்தில் 15 மெட்ரிக் டன் எடை ஏற்றப்பட்ட லாரிகளை கோலட்- சூரத்கல் இடையே கொண்டு செல்ல ரூ.8600 மட்டுமே செலவாகும். 15 டன்னுக்கு மேல் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ர
யில்களில் லாரிகளை ஏற்றி இறக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. இதனால் இச்சேவை வரவேற்பை பெற்றிருக்கிறது. இச்சேவையை முதல் முறையாக மதுரை கோட்டத்தில் துவக்க வேண்டும் என தொழில், வர்த்தகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தெற்கு ரயில்வேயில் இத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக மதுரை, சென்னை இடையே இந்த 'ரயிலில் லாரிகள்' திட்டம் அமலாக உள்ளது.தற்போது கூட வாடிப்பட்டி, திண்டுக்கல்லில் இருந்து ரயில்களில் டிராக்டர்கள் ஏற்றப்பட்டு வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

எண்ணற்ற பயன்கள்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: தொழில் வர்த்தகத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் இச்சேவை மூலம் பெட்ரோல், டீசல் சேமிக்கலாம். பயண நேரம் குறையும். ஒரேநேரத்தில் 50 லாரிகள், ரயில் மூலம் செல்வதால் கார்பன் புகை வெளியேறுவதும் வெகுவாக குறையும். சுற்றுச்சூழலுக்கும் உன்னதமான திட்டம்.

லாரிகளில் டிரைவர், கிளீனிர் உடன் செல்லலாம். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் நெரிசலை பெரிய அளவில் தவிர்க்க முடியும். மலைப்பாங்கான ரோடுகளில் லாரிகள் செல்வதால் ஏற்படும் பயண நேரம், விபத்துகளுக்கு வாய்ப்புகள் குறைவு. ஒரு ரயிலில் 50 லாரிகள் வரை ஏற்றி இறக்க வாய்ப்புள்ளதால் கணிசமான அளவு சரக்குகளை
கையாள முடியும். இச்சேவையை துவக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambantham sasikumar - chennai,இந்தியா
18-பிப்-202013:32:02 IST Report Abuse
sambantham sasikumar இதனால் பொருட்களின் விலை குறைய வாய்ப்புண்டு,
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-பிப்-202016:46:44 IST Report Abuse
Loganathan Kuttuva டீசல் செலவு வெகுவாக குறையும்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-பிப்-202016:45:32 IST Report Abuse
Loganathan Kuttuva தொழில் வர்த்தக சங்கத்தின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X