பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (3)
Advertisement
திண்டுக்கல்லில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்வது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திண்டுக்கல் சந்தை ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கழிப்பறையை சுத்தம் செய்ய பணியாளர் இல்லை.நேற்று இப்பள்ளி மாணவிகள் சிலர் கழிப்பறை மற்றும் அதன் வளாகத்தை தண்ணீர் ஊற்றி துடைப்பத்தால் கழுவி சுத்தம் செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. தினமும் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கின்றனர். இதற்கு காரணமான தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியது: சமூக வலைதளங்களில் புகைப்படம் வந்ததும் அந்த பள்ளியில் ஆய்வு செய்தோம். அப்போது, கழிப்பறையை பயன்படுத்திய மாணவிகள் தண்ணீர் ஊற்றியுள்ளனர். இதனை யாரோ அலைபேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டுள்ளனர். தலைமையாசிரியர் விடுப்பில் இருக்கிறார். அவர் வந்ததும் இது தொடர்பாக விசாரிக்க உள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-பிப்-202016:41:48 IST Report Abuse
Loganathan Kuttuva இது தவறான வேலை அல்ல .
Rate this:
Share this comment
Cancel
balan - Chennai,ஐஸ்லாந்து
15-பிப்-202011:28:39 IST Report Abuse
balan இதில் என்ன தவறு இருக்கிறது ? சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் .
Rate this:
Share this comment
anon - ,
15-பிப்-202017:31:20 IST Report Abuse
anontaxpayers pay to get these things done. not the job of students or teachers. idhula Enna thappa ? why dont you send your kids to clean public toilets as a social service ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X