பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்

Added : பிப் 15, 2020
Advertisement
 பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி:செஞ்சியில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பயணியர் விடுதியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் பாண்டியன், பொதுச் செயலர் அன்பழகன் முன்னிலை வகித்தனர்.மாநில செயற்குழு உறுப்பினர் பசுமலை, ஒன்றிய தலைவர்கள், முன்னாள் ஒன்றிய தலைவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர், அமைப்பு செயலர் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அனைத்து கிளைகளிலும் கட்சியை பலப்படுத்தி வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.முன்னதாக புதிய மாவட்ட தலைவர் கலிவரதனுக்கு செஞ்சி கூட்ரோட்டில் செஞ்சி, வல்லம், மேல்மலையனுார் ஒன்றிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X