மதுவிலக்கு காவல் துறை விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுவிலக்கு காவல் துறை விழிப்புணர்வு ஊர்வலம்

Added : பிப் 15, 2020
Share
 மதுவிலக்கு காவல் துறை விழிப்புணர்வு ஊர்வலம்

மரக்காணம்:கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸ் சார்பில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலம், மரக்காணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. ஊர்வலத்திற்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஞானம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா, மரக்காணம் இன்ஸ்பெக்டர் செல்வவினாயகம் முன்னிலை வகித்தனர்.

மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வரவேற்றார். தலைமை காவலர் அக்தர்பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X