கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோவில் கடத்தி வாலிபர் கொலை: மூவருக்கு ஆயுள்

Added : பிப் 15, 2020
Advertisement

தேனி: தங்கையுடன் பழகுவதை கண்டித்த அண்ணன் ராஜேஷ் கண்ணனை ஆட்டோவில் கடத்திச்சென்று கொலை செய்த கேரளாவைச் சேர்ந்த மூவருக்கு தேனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். கேரளா இடுக்கி மாவட்டம், அணைக்காரா, காந்திநகர் குடியிருப்பில் வசித்தார். வீட்டிலிருந்து 2014 ஆகஸ்ட் 3 ல் குமுளிக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. வண்டன்மேடு போலீசில் தந்தை வீரணன் புகார் செய்தார்.

கம்பம் வனப்பகுதி, வள்ளியப்பாறை பள்ளத்தாக்கில் ராஜேஷ் கண்ணன் உடல் தலை சிதைந்து கிடந்தது. குமுளி போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், குங்கிரிபட்டி ஆனந்தம் ஓமணக்குட்டன் என்பவரின் ஆட்டோவில் ராஜேஷ் கண்ணன் மேலும் 3பேருடன் சென்றதாக தகவல் கிடைத்து. அவரை அழைத்துச்சென்ற அணைக்காரா காந்திநகர் குடியிருப்பை சேர்ந்த ஜான் 26, நண்பர்கள் இடுக்கி வெனிஸ் 28, உதயகிரி மேடு சந்தோஷ் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ராஜேஷ் கண்ணன் தங்கையும் ஜானும் பழகியுள்ளனர். இதை ராஜேஷ் கண்ணன் கண்டித்துள்ளார். இதனால் அவரை ஜான் நண்பர்களுடன் ஆட்டோவில் அழைத்துச் சென்று வள்ளியப்பாறையில் வைத்து அடித்துக்கொலை செய்தது தெரிந்தது.

இவ் வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்த்தில் நடந்தது.மூவருக்கு ஆயுள்ஜான், வெனிஸ், சந்தோஷ்க்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் அதை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் வெள்ளைச்சாமி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X