நீலமங்கலம் ஏரிக்கரை சாலையை தார்சாலையாக மாற்ற கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலமங்கலம் ஏரிக்கரை சாலையை தார்சாலையாக மாற்ற கோரிக்கை

Added : பிப் 15, 2020
Share

கள்ளக்குறிச்சி:நீலமங்கலம் ஏரிக்கரை மண் சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்திற்கு கூத்தக்குடி சாலை வழியாக செல்வது சுற்று வழி என்பதால், ஏரிக்கரை பாதையை கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏரிக்கரை வழியாக சென்று வருகின்றனர்.மேலும், மினி பஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன.

இந்நிலையில், நீலமங்கலம் ஏரிக்கரை பாதையினை கிராம பொதுமக்கள் அதிகளவில் பயன் படுத்தி வருகின்றனர். இதனையொட்டி ஜல்லிகள் கொட்டி மண் சாலையாக சீரமைக்கப்பட்டன. இந்நிலையில், சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக இருப்பதால் அவ்வழியாகச் செல்லும் கிராம பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஏரிக்கரை பாதையினை தார்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X