பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறில் தொடரும் உறைபனி; சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

Added : பிப் 15, 2020
Advertisement
மூணாறில் தொடரும் உறைபனி; சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

மூணாறு: மூணாறில் பிப்ரவரியிலும் உறைபனி தொடர்வதால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் ஆண்டுதோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி பிப்., இறுதி வரை நீடிக்கும். அப்போது மூணாறில் குளிர் அதிகரித்து டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரியில் உறைபனி ஏற்படும்.கடந்தாண்டு ஜன.1 முதல் தொடர்ச்சியாக 11 நாட்கள் வெப்பம் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து உறைபனி ஏற்பட்டது. இந்தாண்டு ஜனவரியில் ஓரிரு நாட்கள் மட்டும் உறைபனி ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக காலையில் அதிகபட்ச வெப்பம் 10 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.

மூணாறு நகரில் நேற்று காலை அதிகபட்ச வெப்பம் 5 டிகிரி செல்சியஸ்சாக இருந்த நிலையில், 30 கி.மீ., தொலைவில் உள்ள செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் வெப்பம் 'ஜீரோ' டிகிரி செல்சியஸ்சாக குறைந்து, அங்கு உறைபனி ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் புல் வெளிகள் முழுவதும் வெண்மையாக காட்சியளித்தன.வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரியிலும் உறைபனி தொடர்வதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X