பொது செய்தி

தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் வரவேற்பு

Added : பிப் 15, 2020
Advertisement

புதுடில்லி: 'அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விபரங்களை, வலைதளங்களில் வெளியிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தலைமை தேர்தல் ஆணையம் வரவேற்றுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், குற்றப் பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்த, 48 மணி நேரத்திற்குள், அவர்களின் குற்றப் பின்னணி விபரங்களை, வலைதளம், பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும். அத்துடன், குற்றப் பின்னணி உள்ளவர், வேட்பாளராக ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும் விளக்க வேண்டும்.இது குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை, ஆணையம் மனதார வரவேற்கிறது. இது, தேர்தல் ஜனநாயக முன்னேற்றத்திற்கு, புதிய அளவுகோல்களை உருவாக்க துணை புரியும். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, 2018அக்.,ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'வேட்பாளர்கள், தங்கள் குற்றப் பின்னணி குறித்து, தேர்தல் பிரசார காலத்திற்குள், குறைந்தபட்சம் மூன்று முறை, டிவி மற்றும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறையில் உள்ளது.இதனுடன், உச்ச நீதிமன்றம் புதிதாக பிறப்பித்த உத்தரவுகளும், தேர்தல் விதிமுறைகளில் சேர்க்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X