அரசியல் செய்தி

தமிழ்நாடு

குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர கால அவகாசம்: சபாநாயகரிடம் காங்., எம்.எல்.ஏ., கடிதம்

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர, இரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என, சபாநாயகரை சந்தித்து, காங்., எம்.எல்.ஏ., தனவேலு கடிதம் அளித்தார்.

புதுச்சேரி பாகூர் தொகுதி காங்., எம்.எல்.ஏ., தனவேலு, இவர், ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். அதையடுத்து, அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், சபாநாயகர் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் நேற்று சபாநாயகர் சிவகொழுந்துவை தனது வக்கீல்களுடன் சென்று தனவேலு சந்தித்து, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர இரு வாரம் கால அவகாசம் வழங்குபடி கடிதம் கொடுத்தார். கடிதத்தை படித்து பதில் தருவதாக சபாநாயகர் கூறினார்.

அப்போது தனவேலு எம்.எல்.ஏ., கூறுகையில், காங்., அரசு மீது, பொதுமக்கள் கூறி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளால் கட்சியின் பெயர் கெட்டு விடக்கூடாது, 2021ல் தேர்தலில் காங்., தோல்வி அடைந்து விடக் கூடாது என்பதற்காக, தவறுகளை நான் சுட்டிக்காட்டினேன், கட்சி மற்றும் முதல்வர், அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்கும் நோக்கிலேயே கூறினேன். ஆனால் அதை குற்றமாக கருதி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எம்.எல்.ஏ., பதவியை பறிக்கும் வகையில் செயல்படுகின்றனர். நான் அரசுக்கு எதிரானவன் அல்ல என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X