பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.அரியூரில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்கப்படுமா?

Added : பிப் 15, 2020
Advertisement

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூரில் கல்வி கொடையாளர் நாராயணசாமி கல்விப் பணிக்காக வழங்கிய 16 ஏக்கர் நிலம் பயனற்று கிடக்கிறது. இதில் அரசு கலைக் கல்லுாரியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூரில் கல்வி கொடையாளர் நாராயணசாமி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக அரசுக்கு தானமாக வழங்கினார்.அங்கு, தற்போது அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, அரசு மாதிரி பள்ளிகள் உள்ளன.

மீதமுள்ள 16 ஏக்கர் பரப்பளவில், திருவண்ணாமலை - திருச்சி மெயின் ரோட்டில், விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி இயங்கி வந்தது. கடந்த கல்வி ஆண்டு மூடப்பட்டது.இதனால் அந்த வளாகத்தில் இருந்த கட்டடங்களும் பயன்படாமல் பழுதடையும் நிலையில் உள்ளது.

இந்த வளாகத்தின் அருகாமையிலேயே அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இதன் மூலம் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பகுதியில், அரசு கலைக்கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி மற்றும் அரசு சட்டக் கல்லுாரிகளை ஒருங்கிணைந்த வளாகத்திலேயே அமைக்க வேண்டும் என சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிகவும் பின்தங்கிய கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைப்பதன் மூலம் இப்பகுதி மக்களின் வாழ்க்கை மேம்படும் என்பது ஏழ்மை நிலையில் இருக்கும் கூலி விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது

.இதுகுறித்து உயர் கல்வித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஜி.அரியூர் கிராம பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X