ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

Added : பிப் 15, 2020
Share
 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

மூங்கில்துறைப்பட்டு:புல்வாமாவில் இறந்த ராணுவ வீரர்களுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி மூங்கில்துறைப்பட்டில் செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் தாக்கியதில் ராணுவ வீரர்கள் இறந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மூங்கில்துறைப்பட்டு அனைத்து வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நான்குமுனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

வணிகர் சங்க தலைவர் சீனுவாசன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலர் ராமலிங்கம், சேகர், சலீம், ஜெயபால், கார்த்திகேயன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X