தமிழ்நாடு

மக்காச்சோளம் அறுவடை பகுதியில் குவியும் மயில்கள்

Added : பிப் 15, 2020
Advertisement

கன்னிவாடி, இயந்திர அறுவடையில் தவறிய மக்காச் சோளத்திற்காக, மயில்கள் கூட்டமாக படையெடுப்பது அதிகரித்து வருகிறது.ரெட்டியார்சத்திரம், ஆத்துார் ஒன்றியங்களில், எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், வீரக்கல், வண்ணம்பட்டி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, வட்டப்பாறை, காரமடை, கசவனம்பட்டி, கோனுார், சுரக்காபட்டி பகுதியில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி நடந்தது. இங்கு தற்போது அறுவடை பணி மும்முரமாக நடக்கிறது.கடந்தாண்டு படைப்புழு, புயல், மழைநீர் போன்ற காரணங்களால் மகசூல் பாதித்தது. போதிய விலையும் கிடைக்கவில்லை.சில வாரங்களுக்கு முன், ஒரு மூடை 1,800 ரூபாயை எட்டியது. வியாபாரிகளால் விலை குறைக்கப்பட்டு, தற்போது மூடைக்கு 300 ரூபாய் வரை குறைத்து கொள்முதல் செய்வதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.இயந்திர அறுவடை பகுதிகளில், சாய்ந்த சோளத்தட்டைகளுடன் மக்காச் சோள மணிகள் சிதறிக் கிடக்கின்றன.இவற்றை உண்பதற்காக காலை, மாலை நேரங்களில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வயல்களுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளிலும், அதிகமான மயில்கள் உலாவருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X