கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குலுக்கலில் வெற்றியை தீர்மானிக்கும் விதியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Added : பிப் 15, 2020
Advertisement

சென்னை: குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்கும், ஊராட்சி தேர்தல் விதியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருவண்ணாமலை மாவட்டம், அடையூர் கிராம ஊராட்சி தேர்தல், ௨௦௧௯ டிசம்பர், ௨௭ல் நடந்தது; ஐந்து பேர் போட்டியிட்டனர். கே.தேவதாஸ், எம்.கலைவாணி இருவரும் தலா, ௯௦௬ ஓட்டுகள் பெற்றனர்.ஊராட்சி தேர்தல் விதியின்படி, குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்கும் தேர்தல்நடந்தது.

குலுக்கலில், கலைவாணிக்கு சாதகமாக விழுந்ததால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்கும் ஊராட்சி விதியை செல்லாது என அறிவிக்க கோரியும், கிராம பஞ்சாயத்து தலைவராக கலைவாணியை அறிவித்தது செல்லாது என உத்தரவிட வேண்டியும், தேவதாஸ் மனு தாக்கல் செய்தார்.

மனுவை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜரானார். முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கை பொறுத்தவரை, குலுக்கல் முறையில் வெற்றி பெறாத மனுதாரர், தேர்தல் விதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, தேர்தலுக்கு பின் விதியை எதிர்த்துள்ளார். தேர்தல் வழக்கு என்றால், அதற்கான அமைப்பில் தான் வழக்கு தொடர வேண்டும். ஆனால், விதியை எதிர்த்துள்ளதால், இம்மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

சட்டத்தை மீறும் வகையில் விதி இருப்பதாக கூறப்படுவதில், எந்த தகுதியும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, மாற்று வழிக்கு சட்டசபை தான் முடிவு காண வேண்டும்; நீதிமன்றம் பரிந்துரைக்க முடியாது.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X