பொது செய்தி

இந்தியா

எங்கிருந்தும் ஓட்டளிக்க வருகிறது தொழில்நுட்பம்

Added : பிப் 15, 2020
Advertisement

புதுடில்லி: வாக்காளர்கள் அவர்கள் வசிக்கும் ஊரிலேயே ஓட்டளிக்க கூடிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து தேர்தல் ஆணையம் உருவாக்கி வருவதாக, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார்.

நாடு முழுவதும் 90 கோடி மக்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 2019 லோக்சபா தேர்தலில், 30 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.பெரும்பாலான வாக்காளர்கள், வேலை, படிப்பு மற்றும் இதர சொந்த காரணங்களுக்காக வெளியூர்களில் வசிக்கின்றனர். தேர்தல் நாளில் சொந்த ஊருக்கு வந்து ஓட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, தேர்தல் ஆணையம் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியதாவது: சொந்த ஊரில் பதிவு பெற்ற வாக்காளர் நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் ஓட்டளிக்க வழி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து உருவாக்கி வருகிறோம்.

என்னுடைய பதவி காலத்திற்குள், அந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டையை, ஆதாருடன் இணைக்கும் பரிந்துரை, மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சட்ட அமைச்சகத்துடன் பிப்.18ல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் போது, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X