அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சுகர் ஏறிப் போச்சு' : பட்ஜெட் வாசிப்பில் ஓ.பி.எஸ்., சிரமம்

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (17)
Advertisement
 'சுகர் ஏறிப் போச்சு' : பட்ஜெட் வாசிப்பில் ஓ.பி.எஸ்., சிரமம்

சென்னை: தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று தாக்கல் செய்தார்.

முன்னதாக, அவர் காலையில், சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள, விநாயகர் கோவிலுக்கு சென்று, வழிபட்டார். வரவேற்புசட்டசபைக்கு, ஜெயலலிதா படம் ஒட்டப்பட்ட சூட்கேஸில், பட்ஜெட் ஆவணங்களை எடுத்து, முதல்வருடன் வந்தார். இருவரும் சட்டசபைக்குள் நுழைந்தபோது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர்.

காலை, 10:01 மணிக்கு, பன்னீர்செல்வம், பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கினார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டினர். மொத்தம், 113 பக்க பட்ஜெட் உரையை வாசித்தார். தொடர்ந்து வாசிக்க, அவர் சிரமப்பட்டார். அவ்வப்போது, குடிநீர் மற்றும் காபி அருந்தினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவரை பார்த்து, ''சுகர் ஏறி விட்டது,'' என, கூறினார்.

வாழ்த்து

பகல், 1:17 மணிக்கு, பட்ஜெட்டை வாசித்து முடித்தார். மொத்தம், மூன்று மணி நேரம், 16 நிமிடங்கள், பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். அவருக்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.நிதி செயலருக்கு முதல் பட்ஜெட்நிதித் துறை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிருஷ்ணன் பொறுப்பேற்ற பின், நேற்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது; மிக நீண்ட உரையாக இருந்தது.

ஓ.பி.எஸ்., மகன் வருகை

துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அவரது இளைய மகன் ஜெயபிரதீப், சட்டசபை மாடத்தில் அமர்ந்து, உரையை கவனித்தார். முன்னாள் எம்.பி., மைத்ரேயனும், மாடத்தில் அமர்ந்திருந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த, விவசாய சங்கப் பிரதிநிதிகளும், பட்ஜெட் நிகழ்ச்சிகளை கவனித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
17-பிப்-202012:31:36 IST Report Abuse
சீனி தம்பி பால்வளம், அண்ணன் சுகர்வலம். நல்லா டீ ஆத்துறிங்களேப்பா....
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-பிப்-202001:25:51 IST Report Abuse
Vena Suna சுகர் விலை பட்ஜெட்ல ஏறி போச்சுன்னு சொன்னார்யா..அதை போய் அவருக்கு சுகர்ன்னு தப்பா போட்டியே
Rate this:
Share this comment
Cancel
dilli - New Delhi,இந்தியா
15-பிப்-202023:54:22 IST Report Abuse
dilli டி கடை மானியம் எவ்வளவு, பேசாம தேனியில் ஆடு மாடு மேய்ச்சுகினு இருந்தா இந்த சுகர் வந்திருக்குமாப்பு, ஆட்டிய போட்ட பணம் ஆயா எங்கு கொண்டு போனது, கிணறு விற்ற கோடி எங்கு செல்லும், கர்லாக்கட்டை சுத்தினவரு எங்கு என்ன கொண்டு சென்றார், என்ன விட்டு சென்றார் சிந்திங்கப்பு, தம்பி எங்கு சென்றார் சிந்திங்க சித்தப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X