பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில்:தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பில் அறு பெரும் விழா

Added : பிப் 15, 2020
Advertisement

சங்கராபுரம்:

சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பில் அறு பெரும் விழா நடந்தது.

தமிழ்ப் படைப்பாளர் சங்கம் சார்பில் தேவநேய பாவாணர், சிந்தனை சிற்பி சிங்கார வேலர், அறிவியல் அறிஞர்கள் சார்லஸ் டார்வின், கலிலியோ ஆகியோரது பிறந்த நாள், உலக தாய் மொழி நாள் விழா, குத்துச்சண்டை வீரர் இஸ்மாயிலுக்கு பாராட்டு விழா ஆகிய அறு பெரும் விழா நடந்தது.தமிழாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார்.

கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி, சங்கைத் தமிழ்ச் சங்க பொருளாளர் கோபால் முன்னிலை வகித்தனர். சங்க துணைத் தலைவர் இளையாப்பிள்ளை வரவேற்றார். தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் துரைமுருகன், சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிதைத்தம்பி, ஆசிரியர் கோமதுரை, கச்சிராபாளையம் குறிஞ்சி தமிழ்க்கூடத் தலைவர் முருகேசன், ஆசிரியர் சம்சுதின் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

குத்துச்சண்டை போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த இஸ்மாயிலை பாராட்டி அரிமா மாவட்ட தலைவர் விஜயகுமார் பரிசு வழங்கினார். திருக்கோவிலுார் தமிழ்ச் சங்கத் தலைவர் சிங்கார உதயன், ஸ்டார் கிளப் முகமது ரபி, நல்லாசிரியர் முகமது உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X