பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர் இளைஞர் சங்க ஆண்டு விழா

Added : பிப் 15, 2020
Advertisement
 மீனவர் இளைஞர் சங்க ஆண்டு விழா

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் மீனவர் இளைஞர் சங்க ஆண்டு விழா மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தொழிலதிபர் ஜனார்தனன் தலைமை தாங்கினார். விஜயகுமார், சீனுவாசன், ரவி, வரதராஜன், அன்பு, ஜான்சன், ஜெயபால் முன்னிலை வகித்தனர். காலையில் ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டபந்தயம், சிறுவர்களுக்கு சாக்கு பை ஓட்டம், பெண்களுக்கு ஊசி நுாள் கோர்த்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கோ கோ, உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இரவு கடைவீதியில் பாட்டிசை பட்டிமன்றம் நடந்தது. மனிதன் மனநிறைவுடன் வாழ்ந்தது வாட்ஸ் ஆப் காலமா? வயல்வெளி காலமா? என்ற தலைப்பில் நடந்த பாட்டிசை பட்டி மன்றத்திற்கு சிவகாசி சசிகலா நடுவராக இருந்தார். கோவை சத்யா, திருநெல்வேலி சித்ரா, மயிலாடுதுறை முத்துலட்சுமி, கீரனுார் கிலோனா பேசினர். ரோட்டரி தேர்வு தலைவர் சுதாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் செயலர் பாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X