அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் இந்து கோவில்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Hindu_temple,AbuDhabi,UAE,அபுதாபி,இந்து_கோவில்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் அமையவுள்ள, முதல் இந்து கோவிலின் கட்டுமான பணிகள், முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபியில், நாட்டின் முதல் இந்து கோவில், பிரமாண்டமாக அமையவுள்ளது. கடந்த, 2018ல், பிரதமர் மோடி, துபாய்க்கு சென்றபோது, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், இந்த கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். 'போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்' என்ற அமைப்பு, அந்த கோவிலை கட்டி வருகிறது.


latest tamil news



இது குறித்து, அந்த கோவில் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் அசோக் கொடேச்சா கூறியதாவது:சுமார், 3 ஆயிரம் சதுர மீட்டர் அளவிலான அடித்தளத்தில், 'பிளை ஆஷ்' எனப்படும் நிலக்கரி சாம்பலில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கொட்டப்பட்டது. பொதுவாக, அடித்தளத்தை வலுப்படுத்த, கம்பிகள் பயன்படுத்தப்படும்.


latest tamil news



ஆனால், இந்தக் கோவில், இந்திய பாரம்பரிய கட்டடக்கலையை அடிப்படையாக வைத்து கட்டப்படுவதால், உருக்கு மற்றும் இரும்புக் கம்பிகளுக்கு பதிலாக, பிளை ஆஷ் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-202018:15:59 IST Report Abuse
ருத்ரா நம் இந்தியாவில் நம் கோயிலைஇடித்து அதன் மேல் வேறொன்றை கட்டி அதை மீட்க சிறுபான்மை என்ற பெயரால் அரசியல் பேசி ஒரு வழியாக அயோத்தியில் நம்கோயில் என்பதற்கு தீர்ப்பு வருவதற்கு எத்தனை எத்தனை சிரமம். வெளி நாட்டில் தலைமைக்கு கட்டுப் படுகிறார்கள் போராட்டம் ஆர்பாட்டம் இன்றி. மகிழ்ச்சி.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-202012:46:29 IST Report Abuse
Tamilan இந்தியாவின் பிரதமர் எப்படி அந்நாட்டு மசூதிக்கு செல்லும்போது குல்லா போட்டு சென்றாரோ அதேபோல் அந்நாட்டு பிரதமர் அல்லது அரசர் காவி உடை போட்டுக்கொண்டோ அல்லது இந்து சமய முறைப்படியோ இந்த கோவில் திறக்கும்போதோ அல்லது அவர்கள் இந்தியாவிற்கு வரும்போது இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு சென்றால்தான் , இரு சமய ஒற்றுமை தழைத்தோங்கும் அல்லது இந்த கோவில் கட்டியதிற்கு அந்நாட்டிடமிருந்து உரிய மரியாதை இருக்கிறது என்பதை இங்குள்ள இந்துக்கள் உணர முடியும் . இல்லாவிட்டால் இந்தியிசத்தை மற்ற மதவாதிகளிடம் சரணடைததற்கு சமம் . அப்படி ஒரு கோவிலை யாரும் விரும்ப மாட்டார்கள் .
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
15-பிப்-202012:31:11 IST Report Abuse
cbonf நமது இந்து மதம் மிக அமைதியாக உலகெங்கும் பரவி வருகிறது. இன்னும் 50 - 100 வருடங்களில் உலகம் முழுவத்தும் இந்து மதத்தை (சனாதன தர்மம்) விரும்பி ஏற்போர் அடிகிரிப்பார்கள். உலகெங்கும் அமைதி நிலவ இந்து மதத்தால் தான் முடியும்.
Rate this:
Divahar - tirunelveli,இந்தியா
15-பிப்-202017:48:54 IST Report Abuse
Divaharஎல்லா நாடுகளிலும் சனாதன தர்மப்படி ஜாதி ஏற்படுத்த வேண்டுமே. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்....
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
18-பிப்-202017:29:40 IST Report Abuse
Jaya Ramஉங்களுக்கு ஒன்று தெரியுமா பிராமணன் என்பது ஜாதியே கிடையாது தெரியுமா அது வந்து சிறப்பு பட்டமே ஒழிய ஜாதிகிடையாது அய்யர், அய்யங்கார் என்பதே ஜாதி பிராமணனாக அனைவருக்கும் தகுதியுண்டு அவரவர் செயல்பாட்டின் மூலமாக...
Rate this:
Jayvee - chennai,இந்தியா
19-பிப்-202012:09:28 IST Report Abuse
Jayveeஅய்யர் அய்யங்கார் எனபதும் ஜாதி இல்லை.. சைவ வைணவ முறையில் அடையாள வார்த்தைகள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X