பொது செய்தி

தமிழ்நாடு

சத்தமின்றி சாதிக்கும் ஷர்மிளா

Added : பிப் 15, 2020
Share
Advertisement

மதுரையில் ரேடியோ சிட்டியின் மதுரை சிட்டிசன் விருது வழங்கும் விழாவில் மதுரையை சேர்ந்த 15 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தினமலர் ஊடக உதவி வழங்க, கரூர் வைஸ்யா வங்கி இணைந்து வழங்கியது. விருது பெற்றவர்கள் இங்கே அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.நோயாளிகளின் மனநிலை அறிந்து, நோயின் தீவிரம் தெரிந்து மருத்துவ சேவை செய்வதில் சத்தமின்றி சாதிக்கிறார் 'பூம் வெல்வேர் கம்யூனிட்டி' தலைவர் ஷர்மிளா. சேவை குறித்து மனம் திறக்கிறார் ஷர்மிளா... ''2011ல் தியாகராஜர் கல்லுாரி ரோட்ராக்ட் குழுவை சேர்ந்த விக்னேஷ்வரன் 'பூம் மதுரை பிளட் டொனேஷன்' குழுவை உருவாக்கினார். அவர் வேறு வேலையில் கவனம் செலுத்தியதால் இதில் உறுப்பினராக இருந்த நான் தலைவராகி சேவையை தொடர்கிறேன்.'பூம் வெல்வேர் கம்யூனிட்டி' என பெயர் மாற்றி ரத்ததானம், ஆதரவற்ற, முதியோர்களுக்கு உதவி, மரக்கன்று நடுதல், புற்றுநோயாளிகளை தத்தெடுத்து சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சேவை செய்கிறோம். 10 ஆண்டு சேவையில் 60 ஆயிரம் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். தினமும் 15 ஒருங்கிணைப்பாளர்கள் வேலையை பகிர்ந்து சேவை செய்வதால் எங்கள் கவனத்திற்கு வரும் நோயாளிகளை பெரும்பாலும் காப்பாற்றி விடுகிறோம்.மதுரை போலீஸ் துறையில் நிறை வாழ்வு பயிற்சி முகாம் மூலம் போலீசாரின் மனஅழுத்தம் நீக்கும் சேவையும் செய்கிறேன். இதன் மூலம் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. லாபத்தை எதிர்பார்க்கவும் இல்லை. மனிதம் காக்கும் மகத்தான சேவையில் மனநிறைவு கிடைக்கிறது. இதுவரை 27க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கி இருந்தாலும் மதுரையின் அடையாளமாக 'சிட்டிசன்' விருது பெற்றதில் மகிழ்ச்சி'' என்றார். - இவரை வாழ்த்த 74483 76060

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X