சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (5)
Advertisement
 திண்டுக்கல்லில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்வது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திண்டுக்கல் சந்தை ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கழிப்பறையை சுத்தம் செய்ய பணியாளர் இல்லை.நேற்று இப்பள்ளி மாணவிகள் சிலர் கழிப்பறை மற்றும் அதன் வளாகத்தை தண்ணீர் ஊற்றி துடைப்பத்தால் கழுவி சுத்தம் செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. தினமும் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கின்றனர்.

இதற்கு காரணமான தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியது: சமூக வலைதளங்களில் புகைப்படம் வந்ததும் அந்த பள்ளியில் ஆய்வு செய்தோம். அப்போது, கழிப்பறையை பயன்படுத்திய மாணவிகள் தண்ணீர் ஊற்றியுள்ளனர். இதனை யாரோ அலைபேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டுள்ளனர். தலைமையாசிரியர் விடுப்பில் இருக்கிறார். அவர் வந்ததும் இது தொடர்பாக விசாரிக்க உள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-202013:07:18 IST Report Abuse
ருத்ரா ஆசிரியர், வீட்டு குழந்தைககளும் அவர்கள் பள்ளியில் பங்கேற்கவேண்டும். பணியாள் வராத, இல்லாமல் சம்பளத்தை கணக்கு காட்டாமல் இருக்க வேண்டும். அதே நேரம் நோய் தொற்று வராமல் பாது காப்பான முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-202011:36:12 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) குழந்தைகள் நல்லொழுக்கங்களை கற்று கொள்ள தடுக்கும் தருதலைகள் தான் இதை எதிரிப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
15-பிப்-202011:26:44 IST Report Abuse
TamilArasan ஜப்பானில் இது சர்வ சாதாரணம் ஆனால் அங்கு ஆசிரியரும் இந்த தூய்மை பணியில் இணைந்து கொள்வது வழக்கம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X