சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாக்கப்பட்ட வாலிபர் இறந்த வழக்கில் மேலும் 5 பேர் கைது

Added : பிப் 15, 2020
Advertisement

விக்கிரவாண்டி:தாக்கப்பட்ட வாலிபர் இறந்த வழக்கில் மேலும் இரு பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 24; பெட்ரோல் பங்க் ஊழியர். இவர் கடந்த 12ம் தேதி பெரியதச்சூர் அடுத்த செ.புதுார் மலையடிவாரத்தில் உள்ள வயல்வெளியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றார். அப்போது வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் தங்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக நினைத்து கூச்சலிட்டனர்.

உடன், அப்பகுதியில் இருந்த பெண்கள், ஆண்கள் என அனைவரும் சக்திவேலை தாக்கினர். இதில் வீட்டிற்கு சென்ற சக்திவேல் மயங்கி விழுந்து இறந்தார்.இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் ராஜா, அவரது மனைவி கவுரி ஆகியோரை கைது செய்த நிலையில், நேற்று நகர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, 54; அவரது மனைவி இந்திரா, 45; மச்சகாந்தன் மனைவி உமா, 35; மதியழகன், 42; செந்தில், 29; ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X