மாநில கராத்தே போட்டி

Added : பிப் 15, 2020
Advertisement
 மாநில கராத்தே போட்டி

திண்டிவனம்:திண்டிவனத்தில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில், கராத்தே வாரியர்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் பதக்கங்களை பெற்றனர்.

திண்டிவனத்தில் உள்ள சுலோசனா பங்காரு திருமண நிலையத்தில், மாவாட்டேகா ஷிட்டோரியோ கராத்தே அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட காரத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் விழுப்புரம் மாவட்டம் சார்பில், திண்டிவனம் கராத்தே வாரியர்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, இந்திய கராத்தே சங்க துணைத் தலைவர் கலைமணி, தேசிய கராத்தே சங்க நடுவர் கிருஷ்ணமூர்த்தி, சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் உலகநாதன், திண்டிவனம் கராத்தே வாரியர்ஸ் பள்ளி பயிற்சியாளர் விஜய்பாரத் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X