சி.பி.ஐ., துன்புறுத்துகிறது விஜய் மல்லையா புகார்| Dinamalar

சி.பி.ஐ., துன்புறுத்துகிறது விஜய் மல்லையா புகார்

Added : பிப் 15, 2020
Share
 சி.பி.ஐ., துன்புறுத்துகிறது விஜய் மல்லையா புகார்

லண்டன்: ''சி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும், எந்தவித காரணமும் இன்றி, நான்கு ஆண்டுகளாக என்னை துன்புறுத்துகின்றன,'' என, தொழில் அதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

'கிங் பிஷர்' விமான நிறுவனம் மற்றும் மதுபான நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரை நாடு கடத்துவதற்கு, பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி தந்த நிலையில், அதை எதிர்த்து, லண்டனில் உள்ள பிரிட்டன் ராயல் நீதிமன்றத்தில், விஜய் மல்லையா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை மூன்று நாட்களாக நடந்து முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜரான மல்லையா, நீதிமன்றத்துக்கு வெளியில் அளித்த பேட்டி:சி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும், நான்கு ஆண்டுகளாக, எந்தவித காரணமும் இன்றி, என்னை துன்புறுத்தி வருகின்றன.

வங்கிகள் அளித்த புகாரின் அடிப்படையில், நான் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலக்க துறை, என் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளது. ஒரே சொத்தை கைப்பற்ற, வங்கிகள் ஒரு புறமும், அமலாக்க துறை ஒரு புறமும் போராடுகின்றன. சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றம் எதிலும், நான் ஈடுபடவில்லை. வங்கிகளுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு கொடுத்த பணத்தை, 100 சதவீதத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த தள்ளுபடியும் வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X