சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி வேன் மீது லாரி மோதி ஒருவர் பலி: 2 பேர் காயம்

Added : பிப் 15, 2020
Advertisement

செஞ்சி:மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி, 38; ஆடு வியாபாரி. நேற்று செஞ்சியில் நடந்த வார் சந்தைக்கு டாடா ஏஸ் வேனில் ஆடுகளை விற்பனை செய்ய ஏற்றி வந்தார். ஆடு விற்பனை செய்துவிட்டு திரும்பிச் சென்றார். வேனை சீனிவாசன் மகன் அன்பழகன், 28; ஓட்டினார். மதுார் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம், 57; உடன் சென்றார்.

காலை 8:00 மணியளவில் செஞ்சி - திண்டிவனம் சாலை வல்லம் ஏரிக்கரை மீது சென்றபோது, எதிரே வந்த லாரி, வேன் மீது மோதியது. இதில் வேன் டிரைவர் அன்பழகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அருணகிரி, ஏகாம்பரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X