சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல்

Added : பிப் 15, 2020
Advertisement

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அருகே இறந்தவரின் உடலை புதைக்க குழிதோண்டுவதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவலுார்பேட்டை அடுத்த நொச்சலுார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் சுப்ரமணி, 62; இவரது நிலத்தருகே புறம்போக்கு இடம் உள்ளது. அதே ஊரைச் சேர்ந்த காந்தி என்பவர் இறந்ததால் அவரது உடலை கடந்த 11ம் தேதி, புதைப்பதற்கு புறம்போக்கு இடத்தில் குழி தோண்டினர்.இதனால், ஏற்பட்ட தகராறில் சுப்ரமணி தரப்பினர் மற்றும் இறந்த காந்தியின் உறவினரான மாரிமுத்து தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாதவன், 34; மாரிமுத்து, 40; திருமலை, 48; ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், ரகு, 35; என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X