பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

Added : பிப் 15, 2020
Advertisement
 அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம்:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவிடம் திறப்பு விழாவில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பது என அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, முத்தமிழ்ச்செல்வன் வரவேற்றனர்.

முன்னாள் எம்.பி., ஏழுமலை, ஆவின் சேர்மன் முருகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் முருகவேல், முன்னாள் மாவட்ட துணைச் செயலர் அற்புதவேல், மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் ரகுநாதன், மாணவரணி செயலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலர் அமைச்சர் சண்முகம், அமைப்பு செயலாளர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். வரும் 24ம் தேதி சென்னையில் திறக்கப்படவுள்ள ஜெ., நினைவிடம் திறப்பு விழாவிற்கு 25 ஆயிரம் பேர் கலந்துகொள்வது உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகர செயலர்கள் பாஸ்கரன், சங்கரலிங்கம், தீனதயாளன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் முகமதுஷெரீப், வழக்கறிஞர் பிரிவு செயலர் ஸ்ரீதர், துணை தலைவர் வேலவன், ஒன்றிய செயலர்கள் சுரேஷ்பாபு,ராமதாஸ்,கண்ணன்,ராஜா,முகுந்தன்,பன்னீர், கிருஷ்ணமூர்த்தி, பொன்மலர், தயாளன், நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் செந்தில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை தலைவர் ராமதாஸ், இலக்கிய அணி செயலர் திருப்பதி பாலாஜி, இணை செயலர் குமரன், ஜெ., பேரவை கோல்டு சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X