ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாக்.,கிற்கு துருக்கி, 'ஜால்ரா'

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (19)
Advertisement

இந்த செய்தியை கேட்க

இஸ்லாமாபாத்,; ''காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான், துருக்கி இரண்டுக்கும் நெருக்கமானது,'' என, துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்து உள்ளார்.






ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகளிடம், புலம்பித் தள்ளியது. ஆனால், சீனா மட்டுமே, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. மற்ற நாடுகள், அது, இந்தியாவின் உள்விவகாரம் என கூறி ஒதுங்கி விட்டன.

இந்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் கூட, பாகிஸ்தானை ஆதரிக்க வில்லை. மேற்காசிய நாடான துருக்கி மட்டுமே, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கு, இந்தியா, அப்போதே சரியான பதிலடி கொடுத்தது.இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன், இரண்டு நாள் பயணமாக, பாகிஸ்தானுக்கு நேற்று வந்தார். அந்நாட்டு பார்லிமென்டின் கூட்டு கூட்டத்தில், நேற்று பேசினார்.





அதன் விபரம்:பயங்கரவாத பிரச்னை யில், எப்.ஏ.டி.எப்., எனப் படும், நிதி நடவடிக்கைக்கான சிறப்பு குழு, பாகிஸ்தானை, சாம்பல் பட்டியலில் வைத்துள்ளது. கறுப்பு பட்டியலில் சேர்க்க, சில நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில், சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை மீட்க, துருக்கி தொடர்ந்து ஆதரவு தரும். ஜம்மு- காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, துருக்கிக்கும் நெருக்கமானது. இந்தப் பிரச்னைக்கு, படை பலத்தால் தீர்வு காண முடியாது. அமைதி பேச்சு வழியாக தான், தீர்வு காண வேண்டும். காஷ்மீர் சகோதர, சகோதரிகள், பல ஆண்டுகளாகவே கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். அதிலும், இந்தியா எடுத்த தன்னிச்சையான நடவடிக்கையால், இந்தப் பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு துருக்கி, தொடர்ந்து ஆதரவு தரும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-202019:18:27 IST Report Abuse
Ramakrishnan உன் வேலையை பார்த்துகிட்டு போவியா . துருக்கி மக்களின் நலனை பாரு. இங்கென்ன வெட்டிப்பயல் சகவாசம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
15-பிப்-202011:42:53 IST Report Abuse
Nallavan Nallavan பிரச்னையைப் பற்றி புரிந்து கொள்ளாமலேயே ஆதரவா ???? மூர்க்கம் என்பது எம்புட்டுப் பொருத்தமான பெயர்
Rate this:
Share this comment
Cancel
hussain - cuddlore,இந்தியா
15-பிப்-202010:52:00 IST Report Abuse
hussain ஐரோப்பிய யூனியனில் அடுத்த மாதம் காஷ்மீர் மற்றும் caa npr nrc களுக்கு எதிராக ஓட்டு எடுப்பு நடக்கப் போகுதே, அதுல போய் இது எங்க உள்ளாட்டு பிரச்சனை என்று சொல்ல வேண்டியது தானே, துருக்கி சொன்னதுக்கு மட்டும் ஏன் கொதிக்கிறாங்க சங்கிகள் அது இஸ்லாமிய நாடு என்பதாலா
Rate this:
Share this comment
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-202012:27:22 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன்ஐரோப்பிய யூனியனில் ஓட்டு எடுப்பு நடத்தினாலும் அண்டார்டிகாவில் ஓட்டு எடுப்பு நடத்தினாலும் இங்கு ஒரு ஆணியும் புடுங்க முடியாது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X