தமிழ்நாடு

மாவட்டத்தில் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள் 26,43,305 பேர் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement
  மாவட்டத்தில் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்  26,43,305 பேர் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

மதுரை: மதுரை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 26 லட்சத்து 43 ஆயிரத்து 305 வாக்காளர்கள் உள்ளனர்.ஆண் வாக்காள்ரகளை விட பெண் வாக்காளர்கள் 37 ஆயிரத்து 735 பேர் அதிகம்
பட்டியலை வெளியிட்ட கலெக்டர் வினய் கூறியதாவது: தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி 1.1.2020 தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு டிச. 23-ல் வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து பெயர்களை சேர்க்க , நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தி 76 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில் பெயர் சேர்க்க கோரி மட்டும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியலில் பத்து சட்டசபை தொகுதிகளிலும், 13 லட்சத்து 2 ஆயிரத்து 700 ஆண், 13 லட்சத்து 40 ஆயிரத்து 435 பெண், 170 இதரர் ஆக 26 லட்சத்து 43 ஆயிரத்து 305 வாக்காளர்கள் உள்ளனர். பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டை 1034 வழங்கப்படுகின்றன. முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை முதற்கட்டமாக 4லட்சம் பேருக்கு வழங்கப்படவுள்ளன என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-பிப்-202017:39:59 IST Report Abuse
Girija எல்லாம் டாஸ்மாக்கின் புண்ணியம். ஆண்களின் இறப்பு விகிதத்தை ஓட்டுரிமை பெற்றிருந்தவர்களுடன் ஒப்பிட்டால் தெரியும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X