இந்தியா

பங்காரி, சிங்காரி சகோதரிகளுக்கு சிலை பாகூர் ஏரியில் கலெக்டர் ஆய்வு  

Added : பிப் 15, 2020
Advertisement
 பங்காரி, சிங்காரி சகோதரிகளுக்கு சிலை  பாகூர் ஏரியில் கலெக்டர் ஆய்வு  

பாகூர்:பாகூர் ஏரியில் பங்காரி, சிங்காரி சகோதரிகளுக்கு சிலை அமைப்பது குறித்து கலெக்டர் அருண் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரியில் இருந்த ஏராளமான மரங்கள் தானே புயலின் போது அழிவுக்குள்ளானது. பொலிவிழந்த பாகூர் ஏரியை உயிர்பிக்கும் வகையில், பாரத் கிரின் பவுண்டேஷன் சார்பில் பனை உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பாகூர் ஏரியின் நீர் மேலாண்மையை சிறப்பான முறையில் உருவாக்கிய பங்காரி, சிங்காரி சகோதரிகளை போற்றும் வகையில், அவர்களின் உருவச் சிலை அமைக்க வேண்டும் என பாரத் கிரின் பவுண்டேஷன் சார்பில் கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலெக்டர் அருண் நேற்று காலை பாகூர் ஏரிக்கு சென்று பங்காரி, சிங்காரி சகோதரிகளுக்கு சிலை வைப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பாகூர் ஏரியில் குழந்தைகள் பூங்கா, உடற்பயிற்சி கூடம், நடை பயிற்சிக்கான பாதை உள்ளிட்டவைகள் அமைப்பது குறித்து, பாரத் கிரின் பவுண்டேஷன் நிர்வாகிகளிடம் கலெக்டர் அருண் ஆலோசனை நடத்தினர். பின்னர், பிள்ளையார்குப்பம் இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து, ஏரியில் மரக்கன்றுகளை நட்டார். ஆய்வின்போது, பவுண்டேஷன் தலைவர் செல்வம், குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X