இந்தியா

காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு

Added : பிப் 15, 2020
Advertisement
 காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு

புதுச்சேரி:காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சலுகைகள் அறிவித்த ஓட்டல்கள் முன்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதலர் தினம் கொண்டாட இந்து முன்னணி மற்றும் பா.ஜ., வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் காதலர் தினத்தையொட்டி சிறப்பு சலுகைகள் அறிவித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த இந்து முன்னணியினர் அந்த ஓட்டலுக்கு சென்று எச்சரித்தனர். அதையடுத்து உடனடியாக பேனர் அகற்றப்பட்டது.

அதேபோன்று, அதே வீதியில் மற்றொரு ஓட்டலில் காதலர்களை வரவேற்கும் வகையில் இதய வடிவிலான பலுான்களை கட்டியிருந்தனர்.காதலர்களுக்கு சிறப்புச் சலுகையும் அறிவித்து இருந்தது. அந்த ஓட்டலுக்கு சென்ற இந்து முன்னணியினர், இதய வடிவிலான பலுான்களை வெடிக்கச்செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டத்திற்கு இந்து முன்னணி மேற்கு நகர தலைவர் ரவி, நகர தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரமேஷ். செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், பொருளாளர் செந்தில்முருகன், துணை தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X