இந்தியா

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தனியார் பள்ளி ஊழியர்கள் பேரணி

Added : பிப் 15, 2020
Advertisement
 பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தனியார் பள்ளி ஊழியர்கள் பேரணி

புதுச்சேரி:பணி நிரந்தரம் கோரி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளத்தினர்கடந்த 10ம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று சட்டபை நோக்கி பேரணி நடத்தினர்.

அதன்படி கம்பன் கலையரங்கம் அருகில் இருந்து பேரணி தொடங்கியது. ் சம்மேளன தலைவர் வின்சென்ட் ராஜ், கிறிஸ்டோபர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சம்மேளன பாலமோகனன் துவக்கி வைத்தார். பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், மறைமாவட்ட முன்னாள் கல்விச்செயலர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ஜென்மராக்கினி ஆலயம் வழியாக சட்டசபை நோக்கி செல்ல முயன்றது. போலீசார் தடுத்து நிறுத்தியதால் அதே இடத்தில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.பேரணியில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X