இந்தியா

பழங்கள், காய்கறி சாகுபடிக்குமானியம் பெற விண்ணப்பிக்கலாம்

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி:தை மாத பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பழவகை மரங்கள், காய்கறிகளுக்கான சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் வேதாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரசு வேளாண் - விவசாயிகள் நலத் துறையில் கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலம் தை மாதப் பட்டத்தில் பயிரிடப்பட்ட பழவகை மரங்கள், வாழை, பூக்கள் மற்றும் காய்கறிகளுக்கான சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகத்தில் இன்று (15ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X