பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு

Added : பிப் 15, 2020
Advertisement

சிவகங்கைதேவகோட்டை தாலுகா வெற்றியாளங்குளம் வருவாய் குரூப்பை சேர்ந்த வெற்றியாளங்குளம், கோவில்பட்டி, திருவிலங்கை, வேலாயுதபட்டணம், மத்தினி உள்ளிட்ட கிராம விவசாயிகள் பலர் தங்கள் வயல்களில் 2018-19ல் நெல் சாகுபடி செய்து, பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்தனர்.

மழை சரியாக பெய்யாமல் பயிர்கள் கருகிய நிலையில் இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மற்ற கிராமங்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டும் இப்பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அப்பகுதி விவசாயிகள் தேவகோட்டை ஒன்றியம் வீரை ஊராட்சி தலைவர் மகேந்திரன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர்.

ஊராட்சி தலைவர் மகேந்திரன் கூறியதாவது: கடந்தாண்டு ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் விளையாமல் கருகியது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் எழுவன்கோட்டை கூட்டுறவு வங்கி மூலம் பயிர்காப்பீடு செய்துள்ள நிலையில் எங்கள் பகுதிக்கு மட்டும் இழப்பீடு வரவில்லை. இழப்பீடு வழங்காவிட்டால் அனைத்து விவசாயிகளும் போராட்டம் நடத்துவோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X