குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம்

Added : பிப் 15, 2020
Advertisement
 குடிநீரை விலை கொடுத்து  வாங்கும் அவலம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி காப்பாரப்பட்டியில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தண்ணீரின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காப்பாரப்பட்டியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.இங்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காப்பாரப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வீடுகள் மற்றும் வீதிகளில் உள்ள பொது குழாய்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முன் குழாய் அமைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது.

போர்வெல் வறண்டதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இக்கிராம மக்கள் கோட்டை வேங்கைபட்டிக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தற்போது தனியார் போர்வெல்களில் மாதம் 200 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் கூறுகையில்: தண்ணீர் கேட்டு பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளோம், ஒரு முறை காலி குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை செய்துள்ளோம் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X