சிங்கம்புணரியில் சேதமடைந்த பள்ளி கட்டடத்தால் அச்சம்

Added : பிப் 15, 2020
Advertisement
 சிங்கம்புணரியில் சேதமடைந்த  பள்ளி கட்டடத்தால் அச்சம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி காப்பாரப்பட்டியில் செயல்படாத பள்ளி கட்டடத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காப்பாரப்பட்டியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக செயலபட்டு வந்த பள்ளிக்கட்டிடம் சேதம் மற்றும் இடப்பற்றாக்குறையால் 2004ம் ஆண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு சில வகுப்புகள் அங்கு மாற்றப்பட்டது.புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் 5 ஆண்டுகள் பழைய கட்டிடத்தில் இயங்கிவந்த வகுப்புகள் கட்டிடத்தின் மேற் கூறைகள் பெயர்ந்து சேதமடைந்ததால் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் 10ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த பள்ளி கட்டிடம் அகற்றப்படாமல் இருப்பதால் பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர். சத்துணவு சமைப்பதற்கு கட்டடம் இல்லாததால் இந்த கட்டிடத்திற்கு அருகிலேயே சத்துணவு சமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு விநியோகித்து வருகின்றனர். அவ்வாறு மாணவர்கள் வரும்போது கட்டிடம் இடியும் நிலையில் மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து பி.டி.ஓ.,க்களுக்கு பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X