பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட் :நிபுணர்கள் கருத்து

Added : பிப் 15, 2020
Advertisement

சிவகங்கை:தமிழக சட்டசபையில் நேற்று வெளியான பட்ஜெட் மூலம் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி பெறும், கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீடு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாக, பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிபுணர்கள் கருத்து-

பொருளாதார வளர்ச்சி பெறும்

ஏ.பி.,ரமாபாய், பேராசிரியர், அரசு மகளிர் கல்லுாரி, சிவகங்கை:தமிழக பட்ஜெட்டில் தொடக்க, உயர்நிலை கல்வி வளர்ச்சி, தொழில், வேளாண்மை உட்பட அனைத்து துறை வளர்ச்சிக்கும் ஏற்றவகையில் சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அடிப்படை தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்து, அதை பலப்படுத்தும் நோக்கில் உற்பத்தி மற்றும் தொழில் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது.

கல்விக்கு முக்கியத்துவம்எம்.அமுதவள்ளி, கல்லுாரி மாணவி, சிவகங்கை:

பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக பட்ச நிதி ஒதுக்கியதை வரவேற்கிறேன். அடிப்படை கல்வி அனைவருக்கும் சென்று சேரும் நோக்கில், நிதி அமைச்சர் திட்டம் தயாரித்துள்ளார். கிராமப்புற மாணவர்களையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளன. இந்த நிதியை முறையாக பயன்படுத்தி, கல்வி வளர்ச்சிக்கு அரசு உறுதி தர வேண்டும். விவசாய பயிர்கடனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது, வேளாண்மையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தந்துள்ளது வரவேற்கதக்கது.

அரசு ஊழியர்கள் ஏமாற்றம்எம்.செல்வக்குமார், மாவட்ட செயலாளர், அரசு ஊழியர் சங்கம், சிவகங்கை:

ஊழியர்கள் எதிர்பார்த்த, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டம் அறிவிக்கும் என எதிர்பார்த்தோம். இல்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தோம். தொகுப்புஊதியத்தில் பணிபுரியும் 4 லட்சம் ஊழியர்களின் காலமுறை சம்பளம் குறித்து எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. காலிபணியிடம் நிரப்பும் அறிவிப்பும் இல்லை. அரசு ஊழியர், ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள் இல்லாதது, ஏமாற்றம் அளிக்கிறது.

பெண்களை ஏமாற்றும் பட்ஜெட் கே.தமிழ்செல்வி, மகளிர் குழு அமைப்பாளர், அரசு ஊழியர் சங்கம், சிவகங்கை:

அரசுத்துறையில் 50 சதவீதத்திற்கு மேல் பெண் ஊழியர்கள் உள்ளனர். பணிபுரியும் இடங்களில் பெண் ஊழியர்களுக்கான ஓய்வு அறை, கழிப்பிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிக்கான எந்த திட்டமும் இல்லை. பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் ஏதும் அறிவிக்கவில்லை. பெண்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது.

நதிநீர் இணைப்பு அவசியம்

ஜோஸ்பின் பாத்திமா, குடும்பத்தலைவி, திருப்புத்துார்: சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்டங்களில் பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வைகை - காவிரி- குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது, வேளாண்மை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குடிமராமத்து திட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். சேலம் மாவட்டம் போன்று முதல்வர் வறண்ட சிவகங்கையிலும் உணவு பூங்காவை துவக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். பிளஸ் 1 மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் திட்டம் வரவேற்கதக்கது. எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது.

சிறு, குறு தொழில் நிதி குறைவு

பாலகுருசாமி, வர்த்தகர் சங்க தலைவர், மானாமதுரை:பட்ஜெட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கலாம். சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு போதிய அளவு இல்லை. இத்தொழில் வளர்ச்சிக்கு அதிக மானியம் தர வேண்டும். உணவு பொருட்களை பதுக்கி வைத்து, செயற்கை விலையேற்றம் செய்வோர் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் உணவு உற்பத்திக்கேற்ற விலை கிடைக்கும்.

கீழடிக்கு நிதி ஒதுக்கீடு

டி.பிச்சை, விவசாய சங்க நிர்வாகி, திருப்புவனம்: கால்நடை துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. வறட்சி காலங்களில் கால்நடை வளர்பபு தான், விவசாயிகளுக்கு கை கொடுக்கும். கீழடியில் தொல்லியல் ஆய்வு மையம் கட்ட ரூ.12 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறேன்.

பயிர் கடனுக்கு நிதி

கணநாதன், முன்னாள் தலைவர், தென்னை விவசாயிகள் சங்கம், திருப்புவனம்: நீர்பாசன திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளனர்.ஆனால், வேளாண் அதிகாரிகள் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது இல்லை. இந்நிதியில் தென்னைக்கு சொட்டு நீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பயிர்கடன் வழங்க பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதை வரவேற்கிறேன். அப்போது தான் விவசாயிகள் தைரியமாக பயிர்களை விளைவிக்க முன்வருவர். வங்கிகளும் தடையின்றி பயிர் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X