அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏன் எதிர்க்கிறோம்னா... தெரியும்... ஆனா தெரியாது: தி.மு.க.,வினருக்கு தெரிந்தது இவ்வளவு தான்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (166)
Share
Advertisement
CAA,CAB,DMK,திமுக,சிஏஏ

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஆதரவு பேரணிகளும், எதிர்ப்பு போராட்டங்களும் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளைக் கூட்டி, சென்னையில் எதிர்ப்பு பேரணி நடத்திய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிர்த்து, மாநிலம் முழுவதும் மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை அறிவித்தார். அதுவரை பொறுமைகாத்த நடிகர் ரஜினி, திடீரென பொங்கியெழுந்து, ''குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும்

முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை். சில அரசியல் கட்சிகளும், மதகுருக்களும் தங்கள் சுயலாபத்துக்காக போராட்டங்களை துாண்டி விடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் வாழ்க்கையே பறிபோகும்,'' என, ஒரு போடு போட்டார். அவ்வளவுதான், அரசியல் வட்டாரத்தை பற்றிக்கொண்டது பரபரப்பு நெருப்பு.

ரஜினிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், ''மாணவர்கள் ஆராய்ந்து, சிந்தித்துப் போராட வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், முதலில், அவர், இந்த சட்டத்திருத்தத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆய்ந்து, ஆராய்ந்து, சிந்தித்து பதில் அளித்திருக்க வேண்டும்,'' எனக்கூற, இருவருக்கிடையே நேரடி கருத்து மோதல் களைகட்டியது. சட்டத்தை ஆய்ந்து, ஆராய்ந்தபின் கருத்து கூற வேண்டுமென ரஜினி மீது பாய்ந்த ஸ்டாலின், தன் கட்சியினருக்கும் கொஞ்சம் அந்த அறிவுரையை கூறியிருந்தால் நல்லது என்றே சொல்லத் தோன்றுகிறது.

காரணம், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தலைமை ஏற்று நடத்திய தி.மு.க., நிர்வாகிகள் பலருக்கும், அந்த சட்டத்தின் அடிப்படை கூட தெரிந்திருக்கவில்லை என்ற கண்டுபிடிப்பு, நாம் நடத்திய ஆராய்ச்சி'யில் அம்பலம் ஆகியுள்ளது.

***

தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு, அவர்கள் அளித்த பதில்களும் 'உள்ளது உள்ளபடி' இங்கே வெளியிடப்படுகிறது. கேள்விக்கான பதில்கள் சரிதானா என, அதற்குரிய வரிசை எண்ணைக்கொண்டு, வலது பக்க கட்டத்தில் தரப்பட்டுள்ள, பதில்களுடன் பொருத்திப்பார்த்து, வாசகர்களே 'மார்க்' போட்டுக்கொள்ளலாம்.


திமுக நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகள் ( உடன் தரப்பட்டிருக்கும் சரியான பதிவுகள், வாசகர்களின் தகவல்களுக்காக..)1. CAA என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?

Citizenship Amendment Act - குடியுரிமை திருத்தச் சட்டம்.

2. CAA -எத்தனை முறை திருத்தப்பட்டிருக்கிறது?

இந்த சட்டம் முதல் முறையாக, ராஜிவ் பிரதமராக இருந்த காலத்தில், 1985ல் திருத்தப்பட்டது. 1992ல் இரண்டாம் முறையாகவும், 2003ல் மூன்றாம் முறையாகவும், 2005ல் நான்காம் முறையாகவும், 2015ல் ஐந்தாம் முறையாகவும் திருத்தப்பட்டுள்ளது. இப்போது மோடி தலைமையிலான பா.ஜ., அரசால் திருத்தப்பட்டது, ஆறாம் முறை. (இதில் தெரிய வருவது யாதெனில், அரசு நினைத்தால் பார்லிமென்ட்டில் மெஜாரிட்டி இருந்தால், எத்தனை முறை வேண்டுமானாலும், யாருக்காக வேண்டுமானாலும், இச்சட்டத்தை திருத்த முடியும்.)

3. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள CAA எந்தெந்த நாடுகளுக்கு பொருந்தும்?

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான்.

4. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள CAA எந்தெந்த மதத்தினருக்கு பொருந்தும்?

ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள். (மேலே உள்ள மூன்று நாடுகளில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 6 மதத்தினர்தான் சிறுபான்மையினர் என்பதால், அந்த 6 மதத்தினர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.)

5. கடந்த, 2014, டிச., 31 வரை எந்தெந்த நாடுகளில் இருந்து, எவ்வளவு பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்?

இந்தியாவில் வசிக்கும் நாடற்ற அகதிகளின் எண்ணிக்கை, 2,89,394 ஆகும். இது பார்லியில் மத்திய அரசு தெரிவித்த தகவல். இவர்களில் வங்கதேசத்தவர் மட்டும், 1,03,817 பேர். இலங்கை தமிழர்கள் 1,02,467 பேர். திபெத்தியர்கள் 58,165 பேர். பர்மா நாட்டவர், 12,434. இது, பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை. பதிவு செய்யப்படாமல், சட்ட விரோதமாக இருப்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருக்கும் என்பது, பாதுகாப்பு ஏஜன்சியினரின் கணிப்பு. பர்மாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரோகின்ஹியா இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மட்டும், 40,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

6. 1947ல், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாகவும், இந்தியா மதசார்பற்ற நாடாகவும் அறிவிக்கப்பட்டதை அறிவீர்களா?

ஆம்.

7. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. அப்போது, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என, மகாத்மா காந்தி கூறியிருந்ததை அறிவீர்களா?

தெரியும்.

8. வெளிநாட்டினர் இந்தியாவில், அதிகாரப்பூர்வ அனுமதியுடன், 11 ஆண்டுகள் தங்கியிருப்பின், இந்திய குடியுரிமை வழங்கலாம் என்ற அடிப்படையில், காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோருக்கு, வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா?(வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன், அங்கு மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, புத்தகம் எழுதினார். பயங்கரவாதிகளின் கொலை மிரட்டலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்து, குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். இவருக்கு, மத்திய அரசு, இந்திய குடியுரிமை வழங்கியது. தஸ்லிமா நஸ் ரீன், ஓர் இஸ்லாமியர் என்பதால், குடியுரிமை மறுக்கப்படவில்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில், சிறுபான்மையினர் என்பதால் துன்புறுத்தலுக்குள்ளாகி, சட்டப்படியாக இந்தியாவிற்குள் தஞ்சம் புகுவோருக்கு, குடியுரிமை வழங்கிட வழிவகை செய்கிறது. மேற்கண்ட மூன்று நாடுகளிலும் வசிக்கும் இஸ்லாமியர்கள், 'சிறுபான்மையினர் அல்ல' என்பதையும் கவனிக்க வேண்டும்.)

தெரியும்.

***


சபாஷ் பொங்கலுாரார்!


latest tamil news'பொங்கலுார்' பழனிசாமி, தி.மு.க., முன்னாள் அமைச்சர்:1. சி.ஏ.ஏ., என்பது சிட்டிசன்சிப் அமென்ட்மென்ட் ஆக்ட். இதை ஒரு தலைபட்சமாக செய்துள்ளனர். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்கள். ஒரு லட்சம் பேர் இங்கு இருக்கின்றனர். அவர்கள் அகதிகள் கூட கிடையாது. ஒரு காலத்தில் இங்கிருந்து அங்கு சென்று தோட்ட வேலை செய்தவர்கள். அப்படி திரும்பி வந்த அவர்களுக்கு இந்த சட்டத்தில் வாய்ப்பு தரப்படவில்லை.
2. முஸ்லிம்களை தவிர்த்து மற்ற அனைத்து மதங்களையும் சேர்த்துள்ளனர்.
3. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறியுள்ளனர்.
4. உலகிலேயே அதிக முஸ்லிம்கள் இருக்கும் நாடு, இந்தியா. 25 கோடி பேர் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
5. 'முஸ்லிம்களை தவிர்த்து மற்ற மதத்தினர் எல்லாம் வரலாம்' என்று இந்த சட்டம் சொல்வதால், முஸ்லிம்கள் போராடுகின்றனர். இப்படி ஒரு தலைப்பட்சமாக இருப்பதால்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
6. இன்று மைனாரிட்டி என்று சொல்லப்படுகிற முஸ்லிம்களிடம்தான், பாபர் காலம் முதல் பகதுார் ஷா காலம் வரை அடிமைகளாக இருந்தோம்.
7. சத்தியசோதனை எல்லாம் படித்திருக்கிறேன். காந்தி, நேரு சொன்னது எல்லாம் அந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் சரியாக இருந்திருக்கும். காந்தி எந்த நாளில், எதற்காக சொன்னார் என்ன விவரம் என்று சொல்லாமல், அவர் சொன்னது பற்றி நான் கருத்து சொல்ல முடியுமா? காந்தி, கட்சியை கூட கலைக்கச் சொன்னார். நாட்டுப்பிரிவினை கூடாது என்றும் சொன்னார். அவர் இல்லையெனில் நாட்டை ஒற்றுமைப்படுத்த ஆளில்லை. அதையெல்லாம் படித்திருக்கிறோம். அவர் பெரிய மகான். அவர் கூறியது பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நான் பெரிய மனிதன் அல்ல.
8. சி.ஏ.ஏ., பற்றி நான் கருத்து சொல்லலாம். மற்றபடி, சோனியா காந்தி பற்றியெல்லாம் நான் சொல்லக்கூடாது. அதையெல்லாம் தலைமை தான் சொல்ல வேண்டும்.


இரண்டு முறை:latest tamil news


Advertisement

மத்தின், தி.மு.க., உடுமலை நகர செயலாளர்:

1. குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்த சட்டத்துல நிறைய பிரச்னைகள் இருக்கு. ஆங்கிலத்துல கரெக்டா உடனே சொல்ல வரவில்லை.
2. இரண்டு முறை.
3. பாகிஸ்தான், பங்களாதேஷ்; ஆப்கானிஸ்தானுக்கு பொருந்தாது.
4. இந்து உட்பட பல மதங்களுக்கு பொருந்தும்.
5. 13 முதல் 15 லட்சம் பேர் இருக்கும்.
6. தெரியும்; முகமது அலி ஜின்னா சிறுபான்மையினருக்கு, உரிய ஒதுக்கீடு பெறவே விரும்பினார்; அதற்கான சூழ்நிலைகள் இல்லாததால், தனிநாடு கோரிக்கை விடுத்தார் என படித்துள்ளேன்.
7. சரியாக தெரியாது.
8. தெரியும்; இந்திரா காந்தி மருமகளானதும் சோனியா இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.


நான்கு முறை:


latest tamil newsஆசாத், தி.மு.க., உடுமலை நகர அவைத்தலைவர்:1. குடியுரிமை திருத்தச் சட்டம்; இங்கிலீஸ்ல கரெக்டா தெரியாது.
2. நான்கு முறை.
3. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் சில முஸ்லிம் நாடுகள்.
4. இந்துக்கள் உட்பட பெரும்பான்மை மதங்களுக்கு பொருந்தும்; முஸ்லிம்களுக்கு பொருந்தாது.
5. 20 லட்சம் பேர் இருப்பார்கள்; கணக்கில் இல்லாதவர்களும் பல லட்சம் இருக்கும்.
6. தெரியும்.
7. அப்ப நாட்டுல ஏகப்பட்ட குழப்பம் இருந்துச்சு; அத்வானி பிறந்த பகுதியே பாகிஸ்தான் கூட சேர்த்திட்டாங்க. நிறைய பேர் பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் வந்து குடியிருக்கிறார்கள்.
8. தெரியும்.


ஐந்தாறு நாடுகளுக்கு...


latest tamil newsபாண்டியராஜ், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், கூடலுார், நீலகிரி

1. குடியுரிமை சட்டம் தானே...!
2. 1955ல் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இதனை சரி செய்து வருகின்றனர்.
3. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்தாறு நாடுகளுக்கு பொருந்தும்.
4. ஹிந்துக்கள், புத்த மதம், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஆறு மதங்கள்.
5. பர்மாவிலிருந்து ரோகின்ஹியா முஸ்லிம்கள் அதிகம் குடியேறியுள்ளனர். அசாம் மக்கள் போராடும் வகையில், வேறு நாட்டின் மக்கள் குடியேற்றம் இருந்ததால் அசாமில் மட்டும், குடியேற்ற சட்டத்தை சரி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எத்தனை பேர் என்பது தெரியாது.
6. தெரியும்
7. நாட்டில் இருக்க கூடிய சிறுபான்மை மக்களை பாதுகாப்பது அந்தந்த அரசுக்கு உள்ளது, என்பது ஒவ்வொரு நாட்டின் சட்டம். மகாத்மா கூறியது பற்றி தெரியவில்லை.
8. தெரியும்.


படித்துதான் கூற முடியும்:திராவிடமணி, தி.மு.க., எம்.எல்.ஏ., கூடலுார், நீலகிரி


latest tamil news
1. 'சிட்டிசன்ஷிப் அமென்மென்ட் ஆக்ட்'-2020
2. இதுவரை இரண்டாவது முறை.
3. பாகிஸ்தான், இலங்கை தவிர பிற அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
4. இந்து, வங்கதேசம் மற்றும் முஸ்லிம், இலங்கை தமிழர் தவிர பிற மதத்தினருக்கு பொருந்தும்.
5. இலங்கை, பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வந்துள்ளனர். எவ்வளவு பேர் என குறிப்பிட்டு கூற முடியாது.
6. தெரியும்.
7. படித்துதான் கூற முடியும்.
8. அரசியல் அமைப்பு சட்டத்தில், 1முதல் 12 வரை, குடியுரிமை சட்டம் விளக்குகிறது. எனவே சோனியாவிற்கு திருமண உறவு முறையில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.


விவரம் இல்லை:பத்மநாபன், திருப்பூர், தெற்கு மாவட்ட செயலாளர்


latest tamil news
''எத்தனை முறை திருத்தப்பட்டது என தெரியல. அந்தளவுக்கு இன்னும் படிக்கலே,'' என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போது, அவருக்கு பின் இருந்த ஒரு நிர்வாகி, ''சிக்ஸ்எம்சி அமன்ட்மென்ட் ஏக்ட்'' என்றார்.

அதை அப்படியே தவறாக ஒப்பித்தார். 'சிஏஏ.,' தொடர்பான கேள்விகளுக்கு, 'கையில் விவரம் இல்லை, வீட்டுல இருக்கு. அது வந்து... சொல்லியிருக்காங்க; மீட்டிங்கில் பேசும் போது கேட்டு இருக்கோம். அந்தளவுக்கு ஆழமாக, இன்னும் படிக்கல. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்தானே. நீங்க படிக்காம இருப்பீங்களா? நெட்டில் பார்த்துட்டு சொல்றோம். ஹலோ.... நீங்க கேள்விய எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்புங்க, பதில் சொல்றோம்,' என்றார்.


அனைத்து மதத்தினருக்கும்:


latest tamil news


டாக்டர் வரதராஜ், தி.மு.க., பொள்ளாச்சி நகர பொறுப்பாளர்

1. Citizenship amendment act (குடியுரிமை திருத்தச் சட்டம்)
2. இரண்டு முறை
3. இந்த திட்டம், மேற்கத்திய நாட்டில் பொருந்தினாலும் நமது இந்திய துணை கண்டத்துக்கு இது பொருந்தாது.
4. அனைத்து மதத்தினருக்கு பொருந்தும்.
5. தெரியாது
6. சரியாக தெரியலை.
7. தெரியும்; அதனை பற்றி முழுமையாக தெரியாது.
8. தெரியாது.


கரெக்ட்டா தெரியல:


latest tamil news


அசோகன், தி.மு.க., பொங்கலுார், ஒன்றிய செயலாளர்

சட்டத்தை படிச்சு பார்க்கணும், கரெக்ட்டா தெரியல. நீங்க ரிப்போர்ட்டர்தானே... உங்களுக்கு தெரியாதா? எத்தனை முறை திருத்துனாங்கங்கன்னு பார்க்கோணும். என்ன, நீங்க இப்படி கேக்குறீங்க. ஆங்கில விரிவாக்கம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்குறது இல்ல. தலைமை சொல்லியிருக்கு, கையெழுத்து வாங்கிட்டு இருக்கோம். தலைமை சொல்லறத செஞ்சுட்டு இருக்கோம். நான், ஆங்கிலம் விரிவாக்கம் என்னவென்று பார்த்துட்டு, 'பைவ் மினிட்சில்' சொல்றேன் சார்.


'சொல்ல மாட்டேன்!'


latest tamil news


எம்.எல்.ஏ., கார்த்திக், தி.மு.க., கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்தினமலர் நாளிதழ், எங்கள் நிலையை எதிர்த்து தான் எழுதிக் கொண்டிருக்கிறது. நீங்கள் எப்படி நியாயமாக இருப்பீர்கள் என்று எதிர்பார்ப்பது? நடுநிலையாக வெளியிடுவதில்லை. நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


பொருந்தும்னு சொல்லுறாங்க


latest tamil news


செல்வராஜ், தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர்

1. Citizenship Amendment Act (இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்)
2. தெரியாது; இதற்கு முன்பு திருத்தப்பட்டுள்ளது என சொல்லியிருக்காங்க.
3. இந்தியாவுக்கு மட்டும். இல்லை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு பொருந்தும்.
4. பொதுவாக முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களுக்கு மட்டும் பொருந்தும் சொல்லுறாங்க.
5. சரியாதெரியல.
6. கேள்விபட்டு இருக்கேன்.
7. அதுபற்றி தெரியாது.
8. தெரியும்.


ஆட்டத்துக்கு நாங்க வரலை!


தி.மு.க., முன்னாள் கவுன்சிலரும், கிழக்கு மண்டல முன்னாள் தலைவருமான சாமி, 10 நிமிடம் கழித்து மீண்டும் போனில் அழைப்பதாக கூறினார். முன்னாள் கவுன்சிலர் மீனா லோகநாதன், உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், அரை மணி நேரம் கழித்து போனில் பேசுவதாகவும் கூறினார். இருவருமே, மீண்டும் பேசவில்லை. இவர்களைப் போன்றே மேலும் பல நிர்வாகிகளும் கருத்துகூற தயங்கி, 'எனக்கு வயிற்றுப் போக்கு - வாந்தி பேதி', 'உடம்புக்கு சரியில்லை', 'ஊரில் இருக்கிறேன்' என்ற காரணங்களைக் கூறி கழன்று கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (166)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
??????? - Thiruvaiyaru,இந்தியா
20-பிப்-202010:05:22 IST Report Abuse
??????? இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் 2019 குடியுரிமை சட்டம் என்றால் என்ன? நாட்டின் குடிமகன்கள் யார் என்று வரையருக்கும் சட்டமே குடியுரிமை சட்டம் ஆகும் இந்தியாவில் எப்பொழுது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது? குடியுரிமைச் சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 1986, 1992, 2003, 2005, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. இந்திய குடியுரிமை பெற வழி என்ன? I. பிறப்பின் அடிப்படையில் 1). யாரெல்லாம் இந்தியாவில் 26-01-1950 அன்றோ அல்லது அதற்க்கு பிறகோ இந்தியாவில் பிறநதார்களோ அவர்கள் இந்தியர்கள். 2).1986 ம் ஆண்டின் சட்டப்படி 1 ஜூலை 1987 க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்கள். 3). 1 ஜூலை 1987 முதல் 3 டிசம்பர் 2004 வரை பிறந்தவர் என்றால் பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும். 4). 3 டிசம்பர் 2004 க்கு பின் பிறந்தவர் என்றால் பெற்றோரில் இருவர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும். 5). மும்பை உயர்நீதி மன்றம் செப்டம்பர் 2013 ல் கொடுத்த தீர்ப்பின் படி, உங்கள் பெற்றோர்கள் இந்தியர்கள் இல்லையென்றால், இந்தியகடவுசீட்டு (Passport) மற்றும் ஆதார் இருந்தாலும் நீங்கள் இந்தியர் அல்ல. II. வம்சாவளியினர் மூலம் குடியுரிமை 1). 26 ஜனவரி 1950 ல் இருந்து 10 டிசம்பர் 1992 வரை வெளிநாட்டில் பிறந்தவராக இருந்தாலும், உங்கள் அப்பா இந்திய குடிமகன் என்றால் உங்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். 2). 10 டிசம்பர் 1992 க்கு பிறகு பிறந்தவர் என்றால், நீங்கள் பிறக்கும் சமயத்தில் பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவரோ இந்திய குடிமகன் என்றால் உங்களுக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கும். 3). 3 டிசம்பர் 2004 க்கு பிறகு நீங்கள் வெளிநாட்டில் பிறந்தவர் என்றால், இந்திய தூதரகத்தில் பிறந்ததை ஒரு ஆண்டுக்குள் பதிவு செய்திருந்தால் (ஒரு வருடம் மேல் எனில் மத்திய அரசின் ஒப்புதலோடு பதிவு செய்யலாம்) நீங்கள் இந்தியர் ஆவீர்கள். III. பதிவின் அடிப்படையில் குடியுரிமை கீழ்கண்ட ஏதாவது ஒன்றின் அடிப்படையில் (சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடாது) இந்திய குடியுரிமை வழங்கப்படும். 1). இந்தியாவில் வழக்கமான குடியிருப்பைக் கொண்ட இந்திய வழித்தோன்றல்கள் தங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும். 2). ஒன்றுபட்ட இந்தியாவிற்கு வெளியில் தங்கியிருந்த இந்திய வம்சாவழியினரும் பதிவு செய்து கொள்ளலாம். 3). இந்தியாவில் குடியிருந்து வருபவர்கள், இந்தியக் குடிமக்களை மணந்து கொண்டாலும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் மனு அளிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும். 4). இந்திய குடிமக்களின் தகுதி வயது அடையாத (minor) குழந்தைகள் பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறலாம். 5). இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதலாம் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாட்டினர், தகுதி வாய்ந்த வயதினை அடைந்த பின்பு பதிவு செய்து கொள்ளலாம். IV. குடிமையாக்கல் மூலம் குடியுரிமை இந்தியாவில் 12 ஆண்டுகள் (1 ஆண்டு தொடர்ச்சியாக வசித்திருக்கவேண்டும்) வசித்தவர் என்றால் குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமை திருத்த சட்டம் 2019 12 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக (1 ஆண்டு தொடர்ச்சியாக வசித்திருக்கவேண்டும்) ) 2019 சட்டத்தில் குறைத்துள்ளனர் மேலும் 2015 வரை மதம் என்ற வார்த்தை குடியுரிமை சட்டத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதச்சார்பின்மைக்கு எதிரான வானர கூட்டத்திற்கும், காசுக்காக மலத்தை திங்கும் துலுக்க ஈனர்களுக்கும் நமது கேள்வி 1. 2015 வரை மத அடிப்படையில் திருத்தப்படாத குடியுரிமை சட்டம் ஏன் 2019 ல் மத அடிப்படையில் திருத்தப்பட்டது ? அதற்க்கான காரணம் என்ன? 2. இந்தியாவின் அண்டைநாடுகளான சீனா நேபாள் பூடான் பர்மா ஸ்ரீலங்கா போன்ற நாடுகளை சேர்ந்த பௌத்த, கிருத்துவ மற்றும் ஹிந்து மக்களை சேர்க்காதது ஏன் ? 3. மதசார்பற்ற நாட்டில் திருத்தப்படும் சட்டம் ஏன் மதத்தை அடிப்படையாக வைத்து திருத்தப்படுகிறது? அகண்ட பாரதம் என்ற ஈனக்கனவுக்கான முயற்சியா? கொடுத்தால் எல்லா நாட்டு எல்லா மதத்தினருக்கு குடியுரிமை கொடு , இல்லையென்றால் யாருக்கும் கொடுக்காதே.
Rate this:
Share this comment
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
19-பிப்-202003:53:48 IST Report Abuse
naadodi தினமலர் நீங்கள் ஒருத்தர்தான் உண்மையை வெளிக்கொணர முயல்கிறீர்கள்..மற்ற தமிழ் ஊடகங்கள் தேசிய உணர்விழந்து விட்டன..
Rate this:
Share this comment
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
18-பிப்-202016:45:04 IST Report Abuse
Gopinathan S பாருங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X