தமிழ்நாடு

இழுபறிகொள்முதல் நெல்லுக்கு பணம் கிடைப்பதில் நுகர் பொருள் வாணிப கழகம் சுறுசுறுப்பாகுமா

Added : பிப் 15, 2020
Advertisement

சிவகங்கை:மாவட்ட அளவில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கிய நெல்லுக்கான பணத்தை வழங்குவதில் இழுபறி நீடிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் பெறுவதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்துள்ளனர்.ஜோதி ரக நெல் தவிர்த்து, ஜெ.சி.எல்., பொன்னி ரக நெல்லை அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். இதற்காக 41 கிலோ மூடைக்கு அரசு விவசாயிகளுக்கு 762 ரூபாய் வழங்குகிறது.

இது தவிர்த்து நெல்லை துாத்துபவர்களுக்கு மூடைக்கு 33 ரூபாய் வசூலிக்கின்றனர். கொள்முதல் நிலையங்களில் நெல் அறுவடை செய்த விவசாயிகள் ஆர்வமுடன் வழங்குவதால், கொள்முதல் நிலையங்களில் மூடைகள் தேங்கி கிடக்கின்றன.


இழுபறி



விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்த நாளில் இருந்து 2 நாட்களுக்குள் அதற்கான விலையை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். இதற்காக விவசாயிகளிடம் ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் போன்றவற்றின் நகலை பெற்று பின்பே நெல் மூடைகளை வாங்குகின்றனர். ஆனால், வாங்கிய நெல்லுக்கான பணத்தை தராமல் இழுபறி செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


பணம் பெறுவதில் சிக்கல்



இது குறித்து மானாமதுரை விவசாயி செல்வம் கூறியதாவது, கொள்முதல் நிலையங்களில் நெல்லை வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும், பணத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை.இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கேட்டால், ஜன.,30 தேதி வரை நெல் வழங்கிய விவசாயிகளுக்கு தான் இது வரை பணம் போட்டுள்ளோம். ஆட்கள் பற்றாக்குறையால் படிப்படியாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும் என்கின்றனர். இதனால், பயிர் கடன் வாங்கிய விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த பணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X