பொது செய்தி

தமிழ்நாடு

கீழடி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்புவனம்:கீழடி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு பட்ஜெட்டியில் நிதி ஒதுக்கியதை அடுத்து திருப்புவனத்தில் பொதுமக்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல்துறை சார்பாக கடந்த 2015ல் அகழாய்வு பணிகள் நடந்தன. தொடர்ச்சியாக இதுவரை மத்திய அரசு மூன்று முறையும் மாநில தொல்லியல்துறை இரண்டு முறையும் அகழாய்வு பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வட்டப்பானை, இரட்டை சுவர், சுடுமண்குழாய், பவளம், முத்திரை உள்ளிட்டவைகளை வைத்து அருங்காட்சியகம் அமைக்க வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு பட்ஜெட்டில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோயில் அருகே தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.இது குறித்து செல்வம் கூறியதாவது, கீழடி அகழாய்வில் தமிழர்களின் நாகரிகம், விவசாயம், தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இவற்றை வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு, தமிழக அரசு தற்போது அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. தென்மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி வைகை - குண்டாறு- காவேரி நதிநீர் இணைப்பிற்கு நிதி ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவிக்கிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X