பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர், ஆசிரியரை ஏமாற்றிய பட்ஜெட் :பணியாளர் சங்க தலைவர் பேட்டி

Added : பிப் 15, 2020
Advertisement
 அரசு ஊழியர், ஆசிரியரை ஏமாற்றிய பட்ஜெட் :பணியாளர் சங்க  தலைவர் பேட்டி

சிவகங்கை, பிப். 15-''தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் பென்ஷன் திட்டம் பணிக்கொடை திட்டம் குறித்து அறிவிக்காதது, ஏமாற்றம் அளிக்கிறது,'' என அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, தமிழக பட்ஜெட் அரசு பணியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் உள்ளது. கடந்த 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை மீண்டும் செயல்படுத்திட வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்டம் நடத்தினோம். அப்போது போராட்டத்தை விலக்கி கொண்டால், கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என முதல்வர் தெரிவித்தார்.

இதனால் போராட்டத்தை விலக்கி கொண்டோம். இந்நிலையில் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அமலில் இருந்து, பின் கைவிடப்பட்ட பணிக்கொடை வழங்கும் திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

பென்ஷன் திட்டம், பணிக்கொடை திட்டம் குறித்து பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லாதது, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்களின் நலனை அரசு புறக்கணித்து விட்டது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X