பொது செய்தி

தமிழ்நாடு

பளு தூக்குதலில் சாதனை படைத்த பெண்

Added : பிப் 15, 2020
Advertisement
பளு தூக்குதலில் சாதனை படைத்த பெண்

திருப்புவனம்:தேசிய பளு துாக்குதலில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை பிரகதி பெண்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டவேண்டும் என்றார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலுாரைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார் 45, இவருக்கு குமுதா என்ற மனைவியும் பிரவீணா, பிரகதி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரகதி சிறுவயதில் இருந்தே பளு துாக்குதலில் ஆர்வம் காட்டி நான்கு வருடங்களாக பல்வேறு சாதனை நிகழ்த்தி வருகிறார். கடந்த ஜனவரியில் ஆந்திர மாநிலம் கர்னுாலில் நடந்த தேசிய பளு துாக்கும் போட்டியில் தமிழகம் சார்பாக பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி., பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பிரகதி, 10ம் வகுப்பு வரை மணலுாரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுள்ளார். அசாமில் 2018ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் 5ம் இடத்தை பிடித்த இவர் தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.அவர் கூறுகையில், கடந்த நான்கு வருடங்களாக பளு துாக்கும் போட்டியில் பங்கேற்று வருகிறேன்.

பெண் குழந்தைகளை பளுதுாக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க பெற்றோர் உள்ளிட்ட பலரும் அனுமதிப்பதில்லை. என் உறவினர்களே கேலி செய்தனர். ஆனால் என் தந்தை உனக்கு எதில் விருப்பமோ அதில் ஆர்வம் காட்டு என உற்சாகப்படுத்தினார். தந்தை, தாய் இருவருமே விவசாயிகள், விளையாட்டு குறித்து யாருக்குமே ஆர்வம் இல்லை.

சீனா உள்ளிட்ட நாடுகளில் பளு துாக்கும் போட்டிகளில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும் பளு துாக்கும் போட்டிகளில் பெண்களுக்கு ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆசை வாரத்தில் ஐந்து நாட்கள் அசைவ உணவு, முறையான பயிற்சியே வெற்றிக்கு காரணம் என்கிறார்.

இவரை பாராட்ட 78715 11187

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X