ஏற்றுமதி ஆலோசனை வழங்கும் ஆசான்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி ஆலோசனை வழங்கும் ஆசான்

Added : பிப் 15, 2020
Share
ஏற்றுமதி ஆலோசனை வழங்கும் ஆசான்

சிவகங்கை கற்ற கல்வியும்,பெற்றஅந்நிய செலாவணி கையிருப்புமே ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும்முக்கிய கருவிகளாகும். அதே போல் தான் கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் அனைவருக்கும் பயன்பட வாழ்வதே ஒரு மனிதனின் வாழ்வை முழுமையடைய செய்யும்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒரு பக்கம் ஏற்றுமதி ஆலோசனை, மற்றொரு பக்கம் கல்விப்பணி என சேவை சார்ந்ததொழிலில் முத்திரை பதித்து வருகிறார் ஜி.ராஜமூர்த்தி. சிங்கம்புணரியில் நடுத்தரகுடும்பத்தில் கல்லுாரி ஆசிரியரின் மகனாக பிறந்தவர், படிக்கும் போதே நடுத்தர குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க கல்வி ஒன்று தான் தீர்வு என கணக்கிட்டு அத்திசைநோக்கியே கல்விப்பயணத்தை தொடர்ந்தார்.

பி.இ., இயந்திரவியல், எம்.டெக்., மரபுசாரா எரிசக்தி பொறியியல், எம்.பி.ஏ., மற்றும் ஏற்றுமதி மேலாண்மையில் டிப்ளமோ எனஇயந்திரம் தொடங்கி ஏற்றுமதி வரையிலான படிப்புகளை தேர்வு செய்து படித்தார். கல்வியும் அறிவும் உதவ வேண்டும் என்ற லட்சியத்துடன் வாங்கிய பட்டங்களை பயன்படுத்தினார், அப்படியே சமூகத்தில் பணியாற்றியும் வருகிறார்.

கல்வி கற்றவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதே தனது முதல் லட்சியமாக கொண்டு2005 முதல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக சேவைக்காக நிறுவனம் ஒன்றை தொடங்கி ஏற்றுமதி இறக்குமதி குறித்த ஆலோசனைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறார்.இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி குறித்த பயிற்சி வழங்கியுள்ளார்.

பள்ளி கல்லுாரிகளில் ஏற்றுமதி தொழில் குறித்து மாணவர்களுக்குகவுன்சிலிங்கும் நடத்தி வருகிறார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் கீழ் செயல்படும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவராக உள்ளார்.தன்னை உயர்த்திய ஏற்றுமதி துறையில் மற்றவர்களும் ஏறி சாதிக்கவேண்டும் என்பதற்காக ஊர் தோறும் சென்று விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

கிராமம் ஒன்றில் சி.பி.எஸ்.சி., பாட திட்ட பள்ளியை நடத்திவரும் இவர்அப்பள்ளி மாணவர்களுக்கு பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதி வணிகம், கணிதம் போன்ற பாடங்களை இவரே முன்னின்று நடத்துகிறார்.

அவர் தெரிவித்ததாவது: என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு நம் நாட்டில் நமது தேவைக்கு போக ஏராளமான செல்வங்கள் கொட்டிக் கிடக்கிறது. உரிய தொழில்கள் மூலம் அவற்றை பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தால் நாடும் முன்னேறும்,நாமும் முன்னேறலாம்.

இவரை பாராட்ட: 97860 37379

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X