பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசம்

Added : பிப் 15, 2020
Advertisement
 உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு  அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசம்

கமுதி:பெண் கவுன்சிலர்களுகஅகு பதிலாக அவர்களின் கணவர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதை அதிகாரிகள் தடுக்காவிட்டால் முதல்வரிடம் புகார் செய்யப்படும் என அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசமாக பேசியதால் கமுதி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கமுதி ஊராட்சி ஒன்றியக்குழுமுதல் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில், ஆணையாளர்கள் ரவி, ராஜேந்திரன் (கிராம ஊராட்சிகள்) முன்னிலையில்நடந்தது. துணை தலைவர் சித்ராதேவி வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்

தமிழ்செல்வி, (தலைவர்) முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கட்சி பாகுபாடின்றி தங்கள் பகுதி குறைகள், கோரிக்கைகளை முன் வைத்தால் கட்சி பேதமின்றி குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

முத்துலட்சுமி (அ.தி.மு.க., ): மறைந்த முதல்வர் ஜெ., உத்தரவுப்படி உள்ளாட்சிகளில் பெண்களுக்கு50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட போதிலும், தற்போது கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலில் 60 சதவீதம் பெண்கள் உள்ளனர்.எனவே,பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அதிகாரிகள் தட்டி கேட்கவேண்டும். தவறினால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவி (ஆணையாளர்): கவுன்சிலுக்குஉட்பட்ட குறைகள், கோரிக்கைகளை மட்டுமே இங்கு கூறவேண்டும்.

சசிக்குமார் (மாவட்ட கவுன்சிலர், தி.மு.க.,): ஆளும் அ.தி.மு.க., அரசுபுகழ்பாட இந்த கூட்டம் நடத்தவில்லை.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்த வேண்டும்.

முத்துபாண்டியம்மாள் (அ.தி.மு.க.,): ஆளும் அ.தி.மு.க., வில் கவுன்சிலராக இருக்கும்
கவுன்சிலர்கள், பெண்களுக்கு ஆதரவாக பேசுவதில் என்ன குறையுள்ளது.இதை ஏன் தடுக்கிறீர்கள். பெண் கவுன்சிலர்கள் சுயமாக செயல்படுவதை ஆதரிக்கவேண்டும்.
பினாமிகள் நிர்வாகத்தில் தலையிட்டால், கட்டாயம் நடவடிக்கை எடுக்க பாடுபடுவோம்.

அன்பரசு (அ.தி.மு.க.,): தி.மு.க., வை சேர்ந்தவர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பதால், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலுக்குஉட்பட்ட பகுதிகளில் திட்டப்பணிகள் முடக்கம் செய்வதாக வதந்தி ஏற்பட்டுள்ளது. பாரபட்சமன்றி திட்டப்பணிகளை செய்யவேண்டும்.

கனகஅரசி (சுயே.,): அபிராமம் அருகே பள்ளபச்சேரியில் ஊரணி நடுவே பல ஆண்டுகளாக கீழே சாய்ந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்றவேண்டும்.ரோடு பணிக்காக துண்டிக்கப் பட்ட குடிநீர் இணைப்பை சீரமைக்கவேண்டும், என்றார்.

ஒன்றிய பொறியாளர் வீரசேகர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X