தமிழ்நாடு

வெளியீடு: ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல்:11 லட்சத்து36 ஆயிரத்து 569 பேர் உள்ளனர்

Added : பிப் 15, 2020
Advertisement
வெளியீடு: ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல்:11 லட்சத்து36 ஆயிரத்து 569 பேர் உள்ளனர்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டார். அதன்படி 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார், திருவாடானை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 5 லட்சத்து 67 ஆயிரத்து 307 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 69 ஆயிரத்து 193 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள், என 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர்.இதற்கு முன்பு கடந்தாண்டு டிச.23ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி 5 லட்சத்து 421 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 60 ஆயிரத்து 959 பெண் வாக்காளர்களும், 70 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 11 லட்சத்து 20 ஆயிரத்து 450 பேர் இருந்தனர்.

கடந்தாண்டு டிச.23 முதல் ஜன.22 வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 8,848 ஆண் வாக்காளர்களும், 9,252 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர்களும், என 18 ஆயிரத்து 101 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே காலத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 962 ஆண் வாக்காளர்களும், 1,018 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலின வாக்காளர்களும், என 1,982 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் ஓட்டுப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர், சப்-கலெக்டர், நகராட்சி, தாசில்தார் அலுவலகங்களிலும், ஓட்டுச்சாவடி அமைவிடங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X