கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் முடிவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (13)
Advertisement
கவர்னர் # முடிவு,முதல்வர் வழக்கு, தீர்ப்பு தள்ளி வைப்பு #

இந்த செய்தியை கேட்க

சென்னை,: இலவச அரிசி வழங்குவதற்கு பதில், பணமாக வழங்கும்படி, கவர்னர் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: புதுச்சேரி மாநில நிர்வாகியாக இருப்பவர், இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார். மாநில அமைச்சரவை எடுத்த முடிவில் இருந்து மாறுபட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, இலவச அரிசி வழங்குவதை நிறுத்துவதாகவும், அதற்கு பதில் பணமாக வழங்கவும், கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.




அரிசிக்கு பதில் பணமாக வழங்கும்படி, புதுச்சேரி அரசுக்கு ஆலோசனை வழங்கி,மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வாபஸ் பெறும்படி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினேன். அமைச்சரவையின் முடிவுக்கு மாறாக, கவர்னர் எடுத்த நடவடிக்கை மற்றும் மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்.மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, இலவச அரிசி வழங்கும் திட்டத்தை, தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சரவணன், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், கவர்னர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சோமயாஜூ, வழக்கறிஞர் சந்திரசேகர், சட்டசபை செயலர் சார்பில் வழக்கறிஞர் ரவிச்சந்தர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்தார்.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
15-பிப்-202020:58:42 IST Report Abuse
s.rajagopalan இந்த நாராயணசாமிக்கும் கிரண் பேடிக்கும் நடக்கும் சண்டை டீ-20 , ஒரு நாள் பந்தயம், டெஸ்ட் கிரிக்கெட் ..ஆட்டங்களை விட ஆண்டுமுழுவது தொடர்ந்து கட்டணம் ஏதுமில்லாமல் நடக்கிறதே ?
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
15-பிப்-202018:33:39 IST Report Abuse
Ray பொதுவிநியோக திட்டம் இந்தியா முழுமைக்குமானதுன்னு மத்திய அரசு சொல்றது ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டைன்னு திட்டம் கொண்டுவரங்க அவங்கதான் அரிசிக்கு பதில் காசு வாங்கி கணக்கிள்னு திட்டத்தின் நடைமுறைகளை மாத்த அதிகாரம் படைத்தவர்கள் அப்படியிருக்க ஒரு மாநிலமாக கூட இல்லாத மத்திய அரசின் கீழுள்ள ஒரு யூனியன் பிரதேசத்தின் "துணை நிலை" ஆளுநர் தன்னிச்சையாக உத்தரவு போட முடியுமா? என்பதை நீதிமன்றம் சொல்ல வேண்டும் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-202013:32:49 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ, தீர்ப்பு வர இன்னும் 5 வருஷம் ஆகும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X