பராமரிப்பின்றி அழிகிறது குண்டாறு: சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு| Dinamalar

பராமரிப்பின்றி அழிகிறது குண்டாறு: சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு

Added : பிப் 15, 2020
Share
 பராமரிப்பின்றி அழிகிறது குண்டாறு: சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு

கமுதி:கமுதி பகுதியில் உள்ள குண்டாறு பராமரிப்பின்றி, சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் அழிந்து வருகிறது.

கமுதியில் இருந்து சேகநாதபுரம், உலகநடை, கருங்குளம், மருதங்கநல்லுார், பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர் வரையிலும், அதன் பின் முதுகுளத்துாரில் ரகுநாத காவிரி ஆறாக மாறி 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலும் குண்டாறு பாசன வசதி கொண்டது. இந்த குண்டாறு பராமரிப்பின்றி, ஆற்று படுகைகளில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

அபிராமம் பகுதியில் பரளையாற்றை போல் உருக்குலைந்து, சிறுமழை பெய்தாலே மழை நீர் கண்மாய்களுக்கு செல்ல முடியாமல், புறம்போக்கு, தரிசு நிலங்களில் தேங்கி வீணாகிறது. இதனால் சமீபத்திய கன மழையின் போது கூட கண்மாய்களுக்கு மழை நீர் செல்லாமல் ரோட்டோரங்களில் வீணாகியது.எனவே பராமரிப்பின்றி அழிந்து வரும் குண்டாற்றை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X