சேதமடைந்த விடுதி கட்டடம் : மாணவிகள் தங்கி படிக்க அச்சம்

Added : பிப் 15, 2020
Advertisement

கமுதி:கமுதி அருகே பராமரிப்பின்றி இடிந்து விழும் விடுதி கட்டடத்தால் மாணவிகள் தங்கி படிக்க அச்சப்படுகின்றனர்.

கமுதி அருகே கோட்டைமேட்டில், 90 பேர் தங்கி படிக்கும் மாணவியர் விடுதி 2011ல் கட்டப் பட்டது. இக்கட்டடத்தில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள கோட்டைமேடு பகுதியில் கனரக வாகனங்கள் இயக்கப்படும் போது, சேதமடைந்த கட்டடத்தில் இருந்து சிமென்ட், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து விழுகிறது. இதனால் மாணவிகள் அரசு விடுதி கட்டடத்தில் தங்கி படிக்க அச்சம் அடைந்து உள்ளனர்.

சேதமடைந்த மாணவர்கள் விடுதி கட்டடங்களை சீரமைக்க மூன்றாண்டுகளுக்கு முன் விடுதி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியும், இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்துவதால், காவிரி குடிநீர் கூட கிடைக்காமல், சமையல், குடிநீருக்காக தினமும் 400 ரூபாய் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X